அணுக்கரு மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணுக்கரு மருத்துவம் (Nuclear medicine) என்பது காப்பிடப்படாத கதிர் ஐசோடோப்புக்களை நேரடியாக மருந்தாகவும் நோய் அறிதலிலும் பயன்படுத்தும் மருத்துவப் பிரிவாகும். அயோடின் 131, தைராய்டு சுரப்பியின் நிலையினைக் காணவும் அதில் புற்று நோயிருந்தால் அதன் மருத்துவத்திலும் பயன்படுகின்றது. அதுபோல் குருதி செவ்வணு புற்றுநோய்க்கு கதிரியக்கமுடைய பாசுபரசு 32 பயன் படுத்தப்படுகிறது. இதுபோல் பல ஐசோடோப்புக்கள் உள்ளன. மாறாக தொலைகதிர் மருத்துவத்திலும் (Teletherapy) அண்மைகதிர் மருத்துவத்திலும் (Brachytherapy) அவைகள் காப்பிடப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்கரு_மருத்துவம்&oldid=2266931" இருந்து மீள்விக்கப்பட்டது