வலைவாசல்:மருத்துவம்
மருத்துவத் திட்டம் | திட்டத்தின் பேச்சுப்பக்கம் | மருத்துவ வலைவாசல் | கட்டுரைக் கவனிப்பு | மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு | பங்குபற்றும் பயனர்கள் | மருத்துவச் சிறப்புக் கட்டுரைகள் |
மருத்துவ வலைவாசல்
மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது நோய்த் தடுப்பு, குணப்படுத்தல் போன்றவற்றின் மூலம் மனிதர்களின் உடல் நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உடல் நலம் பேணற் செயல்முறைகளை உள்ளடக்கும். தற்கால மருத்துவம், காயங்களையும் நோய்களையும் கண்டறிந்து குணப்படுத்துவதற்கு, உடல் நல அறிவியல், உயிர் மருத்துவ ஆய்வுகள், மருத்துவத் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது. இவ்வாறன குணப்படுத்தல் பெரும்பாலும், மருந்துகள், அறுவை மருத்துவம் மற்றும் பிற சிகிச்சைகள் மூலம் செய்யப்படுகிறது. தற்கால மருத்துவத்துக்கு மருத்துவத் தொழில்நுட்பமும், நிபுணத்துவமும் இன்றியமையாதவை எனினும், நோயாளிகளின் உண்மையான துன்பத்தைக் குறைப்பதற்கு, மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளலும், கருணையும் தொடர்ந்தும் தேவையாகவே உள்ளன.
மருத்துவம் பற்றி மேலும்... |
சிறப்புக் கட்டுரை
இந்த ஈழை நோயானது தொய்வு, இழுப்பு, முட்டு, சுவாச முட்டு, மூச்சுத் தடை நோய், மூச்சுப் பிடிப்பு நோய் என பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா...
- அசைவுப் பார்வையின்மை எனும் குறைபாட்டில் பாதிக்கப்பட்டவருக்கு ஓரு பொருளின் தொடர்ச்சியான அசைவை (படம்) நோக்க இயலாது.
- பிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் ஒருவருக்கு மீன் நெடி வீசும் மீன் நெடிக் கூட்டறிகுறி உண்டாகின்றது.
- மரபணு இருக்கை என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும்.
- ஸ்டாக்ஹோம் கூட்டறிகுறியின் அடிப்படை தன்னைக் கடத்தியவர் மீது கடத்தப்பட்டவருக்கு ஏற்படும் பற்றுதல் ஆகும்.
சிறப்புப் படம்
வெண்குருதியணுக்களின் வகைகளில் ஒன்றான பெருவிழுங்கிகள் சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்களை உருவாக்கும் நோய்க்காரணிகள் போன்றவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் தன்மை கொண்டவை. ஒரு பெருவிழுங்கி நோய்க்காரணியை உள்ளெடுக்கும் படிமுறையை இப்படம் காட்டுகின்றது.
a. விழுங்குதல் மூலம் உள்ளெடுத்தல், இதன்போது ஒரு தின்குழியவுடல் உருவாகும் (phagosome)
b. பிரியுடலுடன் (Lysosome), தின்குழியவுடல் இணைந்து தின்குழியப்பிரியுடல் (phagolysosome) உருவாகும்; நோய்க்காரணியானது நொதியங்களால் உடைக்கப்படும்.
c. கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படும் அல்லது தன்மயமாக்கப்படும் (c. படத்தில் காட்டப்படவில்லை)
பகுதிகள்:
1. நோய்க்காரணிகள்
2. தின்குழியவுடல்
3. பிரியுடல்கள்
4. கழிவுப் பொருட்கள்
5. குழியமுதலுரு
6. கல மென்சவ்வு
உடற்கூற்றியல் | நோய்கள் | முதலுதவியும் அவசர மருத்துவமும் | உடலியங்கியல் |
---|---|---|---|
மருந்தியல் | நோயியல் | அறுவை மருத்துவம் | மருத்துவ அறிஞர்கள் |