உள்ளடக்கத்துக்குச் செல்

மருத்துவ சிகிச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவ சிகிச்சை
போலியோவினால் பாதித்த குழந்தைக்கு இயன்முறைமருத்துவம் வழங்குதல்
MeSHD013812

மருத்துவ சிகிச்சை (ஆங்கிலம்:Treatment மற்றும் Therapy; பொதுவாக tx, Tx, அல்லது Tx என குறிக்கப்படுகிறது.) என்பது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படும் ஒரு வழிமுறை ஆகும். பெரும்பாலும் நோய்களை கண்டறிந்து பின் சிகிச்சையளிக்கப்படும். உதாரணமாக மருத்துவ துறையில் உளவியலாளர்கள் மற்றும் பல மனநலம் சார்ந்த தொழில்முறையாளர்கள், மனநல மருத்துவர்கள், மனநல மருத்துவ செவிலியர்கள் கலந்தாய்வாளர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த சமூக பணியாளர்கள் முதலானோர் கூட்டாக இணைந்து உளவியல் சிகிச்சை வழங்குகின்றனர். ஆங்கில சொல்லான Therapy இலத்தீன் மொழில் உள்ள Therapīa என்ற சொல்லில் இருந்து வந்தது (மேலும் கிரேக்கம்: θεραπεία).[1] மருத்துவ சிகிச்சைகளின் விதிப்படி அணைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கும் சிகிச்சை வழங்குதலுக்கான அறிகுறிகள் மற்றும் எதிரான அறிகுறிகள் என உள்ளது

வகைப்பாடு[தொகு]

மருத்துவ சிகிச்சை என்பது பல சிகிச்சை முறைகளைக் கொண்டு பல வகைகளின் வகைகளாக வழங்கப்படுகிறது.

நோக்கத்தின் அடிப்படையில் வகைப்பாடு[தொகு]

 • முதன்மையான சிகிச்சை
 • பாலமான சிகிச்சை
 • ஒருங்கிணைந்த சிகிச்சை
 • குணப்படுத்தும் சிகிச்சை
 • உறுதியான சிகிச்சை
 • இலக்கு சிகிச்சை
 • அனுபவம் வாய்ந்த சிகிச்சை
 • நிலையான சிகிச்சை
 • கண்டறியும் சிகிச்சை
 • பராமரிப்பு சிகிச்சை
 • நோய்த்தடுப்பு சிகிச்சை
 • காப்பு சிகிச்சை
 • படிநிலை சிகிச்சை
 • ஆதரவு சிகிச்சை
 • முறையான சிகிச்சை

காலவரிசை அடிப்படையில் வகைப்பாடு[தொகு]

சிறப்பு அமைப்பு அடிப்படையில் சிகிச்சை[தொகு]

இந்த அடிப்படையில் இயற்பியல் காரணிகள் (வெப்பம், குளிர், கதிர்வீச்சு, மின்காந்த அலை, ஒளி அலை மற்றும் ஒலி அலை), வேதியல் காரணிகள் (கனிமம் மற்றும் கரிமம்), மின் சாதனங்கள், உயிரியல் காரணிகள் மற்றும் இயற்கை காரணிகள் (நீர், நெருப்பு, காற்று மற்றும் மண்) முதலியவற்றைக் கொண்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவ_சிகிச்சை&oldid=3679612" இலிருந்து மீள்விக்கப்பட்டது