கண் மருத்துவம்
![]() அமெரிக்க கடற்படைத் தளபதி கென்னத் குபிஸ் மற்றும் அமெரிக்க விமானப்படை கேப்டன் டைகே ரிச்சர்ட்சன் ஆகியோர் கோடாபாடோவைச் சேர்ந்த 12 வயது சிறுமியான மேரிலின் கன்சிக்கு கண்புரை கண் அறுவை சிகிச்சையின் போது இயக்க நுண்ணோக்கியைப் பயன்படுத்துகின்றனர். | |
அமைப்பு | கண் மற்றும் பார்வைத் தொகுதி |
---|---|
குறிப்பிடத்தக்க நோய்கள் | கண் புரை நோய், விழித்திரை நோய், கண் அழுத்த நோய், கருவிழிப்படலம் நோய், Eyelid and Orbital disorders, Uveitis, மாறுகண், Ocular neoplasms, Neuro-ophthalmologic disorders |
குறிப்பிடத்தக்கச் சோதனைகள் | Ophthalmoscopy, Visual field test, Optical coherence tomography |
நிபுணர் | கண் மருத்துவர் |
தொழில் | |
---|---|
பெயர்கள் | மருத்துவர் அறுவைச் சிகிச்சை நிபுணர் |
வகை | Specialty |
செயற்பாட்டுத் துறை | மருத்துவம், அறுவைச் சிகிச்சை |
விவரம் | |
தேவையான கல்வித்தகைமை | Doctor of Medicine (MD), Doctor of Osteopathic Medicine (DO), Bachelor of Medicine, Bachelor of Surgery (MBBS), Bachelor of Medicine, Bachelor of Surgery (MBChB) |
தொழிற்புலம் | மருத்துவமனைகள், சிகிச்சையகம்கள் |
கண் மருத்துவம்(அ) கண்ணியல் (Ophthalmology) /ˌɒfθælˈmɒlədʒi/[1] என்பது கண் தொடர்பான நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளைக் குறிக்கும் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சையின் பிரிவினைக் குறிப்பதாகும்.[2]
கண் மருத்துவர் என்பவர் கண் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மருத்துவரைக் குறிப்பதாகும்.[3][4] மருத்துவத்தில் பட்டமும், அதைத் தொடர்ந்து கண் மருத்துவத்தில் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் உறைவிடப் பயிற்சியும் பெற்று இருப்பர். கண் மருத்துவத்திற்கான உறைவிடப் பயிற்சி திட்டங்களுக்கு உள் மருத்துவம், குழந்தை மருத்துவம் அல்லது பொது அறுவை சிகிச்சை ஆகியவற்றில் பயிற்சியுடன் ஒரு வருட உள்ளகப் பயிற்சியும் தேவைப்படலாம். கண் நோயியலின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் கூடுதல் சிறப்புப் பயிற்சி பெறப்படலாம்.[5]
கண் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், ஒருங்கொளி சிகிச்சையை செயல்படுத்துவதற்கும், தேவைப்படும்போது அறுவை சிகிச்சை செய்வதற்கும் கண் மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.[6] கண் மருத்துவர்கள் கண் நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றிய கல்வி ஆராய்ச்சியில் பங்கேற்கலாம்.[7]
நோய்கள்
[தொகு]கண் மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்படும் பொதுவான நோய்களின் ஒரு பகுதி பட்டியல் பின்வருமாறு:[8]
- கண்புரை[9]
- கண்ணீர் குழாய் அடைப்பு
- கண் துருத்தம்
- கண் கட்டிகள்
- நீரிழிவு விழித்திரை நோய்
- உலர் கண் நோய்க்குறி
- கண் அழுத்த நோய்[10]
- விழிப்புள்ளிச் சிதைவு
- ஒளிவிலகல் பிழைகள்
- மாறுகண் (கண்களின் தவறான அமைப்பு அல்லது விலகல்)
- கருவிழிப்படல அழற்சி
நோய் கண்டறிதல்
[தொகு]

கண் பரிசோதனை
[தொகு]கண் பரிசோதனையின் போது செய்யப்படும் பரிசோதனை முறைகளின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு
- உள்விழி அழுத்தத்தை தீர்மானிக்க கண் அழுத்த அளவி
- ஒளிவிலகல் மதிப்பீடு
- விழித்திரை பரிசோதனை
- பிளவு விளக்கு பரிசோதனை
- பார்வைத் திறன்
பண்டைய இந்தியா
[தொகு]இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணரான சுஷ்ருதர் சுமார் ஆறாவது நூற்றாண்டில் சமசிகிருதத்தில் சுஷ்ருதாவை சம்ஹிதா எனும் நூலினை எழுதினார்[11]. அதில் 76 விழியின் நோய்கள் விவரிக்கப்பட்டுள்ளது (இவற்றில், 51 அறுவை சிகிச்சை) அத்துடன் பல கண் சார்ந்த அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.[12][13] கண்புரை அறுவை சிகிச்சை பற்றிய அவரது விளக்கம் புரைவில்லை நெறித்தல் முறையுடன் இணக்கமாக இருந்தது.[14] அவர் முதல் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவராக விவரிக்கப்படுகிறார்.[15][16]
தொழில்முறை தேவைகள்
[தொகு]இந்தியா
[தொகு]இந்தியாவில், இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவையியல் (இந்தியா) பட்டப்படிப்பை முடித்த பிறகு, கண் மருத்துவத்தில் முதுகலை பட்டம் தேவை.
சான்றுகள்
[தொகு]- ↑ "ophthalmology". Oxford Dictionary. Archived from the original on 9 ஜூலை 2016. Retrieved 14 September 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "History of Ophthalmology". www.mrcophth.com. Archived from the original on 2017-08-08. Retrieved 2021-11-06.
- ↑ "Ophthalmology". American Medical Association. Retrieved 28 March 2020.
- ↑ "டாக்டரைக் கேளுங்கள்: கண் மருத்துவர் டாக்டர் சூசன் மார்த்தாண்டன் பதிலளிக்கிறார்.". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2017/jun/28/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2728418.html. பார்த்த நாள்: 6 November 2021.
- ↑ Boyd, Kierstan (6 June 2016). "Ophthalmology Subspecialists". American Academy of Ophthalmology.
- ↑ Smith, Yolanda (5 September 2016). "Ophthalmology". News-Medical.net (in ஆங்கிலம்).
- ↑ Churchill, Jennifer; Gudgel, Dan T. (1 November 2013). "What is an Ophthalmologist?". American Academy of Ophthalmology.
- ↑ WebMD. "What Causes Eye Problems?". WebMD.
- ↑ "கண் புரை; அறுவைச் சிகிச்சை இல்லாமல் தடுக்கும் மருத்துவம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு". Hindu Tamil Thisai. Retrieved 2021-11-06.
- ↑ 100010509524078 (2021-08-03). "வரும் முன் காத்து, கண்களை பாதுகாப்போம்". Maalaimalar (in ஆங்கிலம்). Retrieved 2021-11-06.
{{cite web}}
:|last=
has numeric name (help) - ↑ Boslaugh, Sarah (2007). Encyclopedia of epidemiology. SAGE. p. 547. ISBN 978-1412928168.
- ↑ Bidyadhar, N.K. (1939), Sushruta's Ophthalmic Operations, Archives of Ophthalmology, 22, page 553.
- ↑ Agarwal, R.K. (1965), Ancient Indian Ophthalmology, The Ophthalmic Optician, 5(21),1093-1100 (the title of this journal was changed to Optometry Today in 1985), published by the Association of Optometrists, London, England.
- ↑ Roy, P.N., Mehra, K.S. and Deshpande, P.J. (1975), Cataract surgery performed before 800 BC, British Journal of Ophthalmology, 59, page 171
- ↑ "Susruta: The Great Surgeon of Yore". Infinityfoundation.com. Retrieved 2008-11-04.
- ↑ Kansupada, K. B.; Sassani, J. W. (1997). "Sushruta: The father of Indian surgery and ophthalmology". Documenta Ophthalmologica. Advances in Ophthalmology 93 (1–2): 159–167. doi:10.1007/BF02569056. பப்மெட்:9476614.