கருவிழிப்படலம்
கருவிழிப்படலம் | |
---|---|
மனிதக் கண்ணின் மாதிரிபடம் | |
அடையாளங்காட்டிகள் | |
MeSH | D003315 |
TA98 | A15.2.02.012 |
TA2 | 6744 |
FMA | 58238 |
உடற்கூற்றியல் |
கருவிழிப் படலம் அல்லது விழி வெண்படலம் (cornea) என்பது கண்ணில் ஒளி ஊடுருவக்கூடிய வட்டவடிவ முன்பகுதியாகும்.[1]விழிவெண்படலத்தில் இரத்த நாளங்களோ அல்லது நிணநீர் நாளங்களோ கிடையாது. இதனால் இரத்த ஓட்டம் இல்லாத இந்த விழி வெண்படலத்திற்கு தேவைப்படும் ஆக்சிசன் மற்றும் உணவுப்பொருட்களை கண்ணின் நடு இரத்த நாள அடுக்கான விழியடி கரும்படலத்தின் முன் பகுதியில் இருக்கும் சிலியரி உறுப்பிலிருந்து பெறுகிறது. அம்மை, கண்நோய், காயம் பட்டு ஆறும்போது ஏற்படும் வடு போன்றவை இதன் ஒளி ஊடுருவும் தன்மையை பாதிக்கின்றது. வடு வெண்மையாக பெரும் புள்ளிகளாகத் தெரிவதால் இதைப் பேச்சுவழக்கில் பூவிழுதல் என்கின்றனர்.[2]இதனால் பொருளில் இருந்து வரும் ஒளி ஒளித்திரையை அடைவது தடுக்கப்படுகிறது. இதனால் பார்வைக்குறைவு ஏற்படுகிறது. இத்தகைய குறைபாடு உடையவர்களுக்கு விழி வெண்படலத்தை கண் கொடை செய்தவர்களிடம் இருந்து பெற்று பொருத்துகின்றனர்.