நோயியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நோயியல்

மருத்துவத்தில் நோயியல் என்பது நோய் பற்றி ஆராய்ந்து என்ன நோயெனக் கண்டு பிடித்தலாகும். மருத்துவ நோயியல் இரு பெரும் பிரிவுகளில் அடங்கும். அவை உடற்கூறியல் நோயியல் (anatomical pathology), சோதனை நோயியல் (clinical pathology) என்பனவாகும். மருத்துவ நோயியலில் உடல் உறுப்புக்கள், இழையங்கள், உடல் திரவங்கள், அத்துடன் சில சமயம் முழு உடல் என்பன நோயறிதலின் பொருட்டு ஆய்வுக்குட்படும். பிணக்கூறாய்வில் (autopsy) முழு உடலும் ஆய்வுக்குட்படும். பொதுவான நோயியல் என்பது உடலிலுள்ள உயிரணுக்கள், இழையங்கள் ஆகியவற்றில் ஏற்படும் காயங்களின் பொறிமுறைகளையும், அந்த காயங்களுக்கும், அவற்றை திருத்தி பழைய நிலைக்கு கொண்டு வரவும் உடலானது எவ்வாறு எதிர் வினையாற்றும் என்பதைப்பற்றியும் விளங்கிக்கொள்ள முயல்வதைக் குறிக்கும். நோயை எதிர்கொள்ள உயிரணுக்கள் இழையநசிவு (Necrosis), அழற்சி (inflamation), காயம் ஆறுதல் (wound healing), உயிரணுப் பெருக்கம் (Neoplasm) போன்ற முறைகளால் முயற்சியை மேற்கொள்ளும்.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோயியல்&oldid=2814912" இருந்து மீள்விக்கப்பட்டது