உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 மருத்துவத் திட்டம் திட்டத்தின் பேச்சுப்பக்கம் மருத்துவ வலைவாசல் கட்டுரைக் கவனிப்பு மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு பங்குபற்றும் பயனர்கள் மருத்துவச் சிறப்புக் கட்டுரைகள் 

விக்கித் திட்டம் மருத்துவம் உங்களை வரவேற்கிறது

நோக்கம்[தொகு]

இத்திட்டம் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதையும், புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும். இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள இங்குள்ள 'பங்குபற்றும் பயனர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்க்கவும்.

முதலில், ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள அனைத்து மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை இங்கே சேர்க்கலாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் குறுங்கட்டுரைகளாக உள்ள நிலையில், தங்களால் இயன்ற அளவுக்குத் தேடுபொறி உதவியுடன் தகுந்த ஆதாரங்களுடன் தமிழில் நிறைவான கட்டுரைகளை இயற்றவும். மருத்துவத்தில் மிகவும் முக்கியமானதெனக் கருதும் கட்டுரைகளை இயன்றவரையில் இனம் கண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளைச் செம்மைப்படுத்தி தரம் உயர்த்தி சிறப்புக் கட்டுரைகளாக மாற்றுவதும் இத்திட்டத்தின் நோக்கங்களுள் ஒன்று.

துணைத் திட்டங்கள்[தொகு]

பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இட வேண்டல்[தொகு]

விக்கித் திட்டம் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், {{விக்கித்திட்டம் மருத்துவம்}} என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.

மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் விக்கித்திட்டம் மருத்துவம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


உடன் செய்ய வேண்டியவை[தொகு]

மேற்கோள் சுட்டுதல்[தொகு]

மருத்துவம்தொடர்பான பெரும்பாலான கட்டுரைகள், ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. பெரும்பாலான கட்டுரைகளில் மேற்கோள் நூல்கள் சுட்டப்பட்டிருப்பினும், மொழிபெயர்ப்பு வேகம் கருதிக் கட்டுரை ஊடான மேற்கோள் சுட்டப்படவில்லை. எனவே கட்டுரைகளின் நம்பகத்தன்மையைச் சரி பார்த்துக்கொள்ள, 'ஆங்கில விக்கிப்பீடியா' கட்டுரையில் உள்ள மேற்கோள்களைச் சரி பார்த்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறது.

தரம் பிரித்தல்[தொகு]

கட்டுரைகளைக் குறுங்கட்டுரைகள், தொடக்கநிலைக் கட்டுரைகள், ஓரளவு வளர்ந்த கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள் என்பதுபோலத் தரம்பிரிக்க வேண்டும்.

உசாத்துணைகள்[தொகு]

மருத்துவத்தில் உள்ள தகவல்கள் மெய்யானதாக இருக்க வேண்டும், சில தகவல்கள் வெவ்வேறு ஊடகங்களில் மாறுபட்டுக் காணப்படுவதுண்டு, எனவே சரியான தகவலை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நம்பத்தகுந்த நூல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றை மேற்கோள் காட்டி எழுதுதல் மிகவும் அவசியமானது. இவ்வாறு அடிக்கடி பயன்படக்கூடிய மருத்துவ உசாத்துணைகளையும், பிற சான்றுகளையும் இங்கு குறிப்பிடவும். இவற்றை வைத்திருக்கும் பயனர்களின் பெயரையும் பதிந்து வைத்தால் தேவைப்படும்போது கேட்டுக்கொள்ளலாம்.

ஆங்கிலம்
  • Nicki R. Colledge, BSc, FRCP(Ed), Brian R. Walker, BSc, MD, FRCP(Ed) and Stuart H. Ralston, MD, FRCP, FMedSci, FRSE (2010). davidson's principles and practice of medicine. Churchill Livingstone. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7020-3085-7.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  • VINAY KUMAR, ABUL K. ABBAS (2010). Robbins and Cotran Pathologic Basis of Disease. Saunders, an imprint of Elsevier Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8089-2402-9.
தமிழ்

நூலகத் திட்டத்தில்மருத்துவம் துறை பற்றி தமிழ் நூல்கள் உள்ளன. நூலக மருத்துவம் வலைவாசல்: [1]

தொடர்புடைய விக்கித் திட்டங்கள்[தொகு]

வழிகாட்டிகள்[தொகு]