தொகுப்பியக்க உயிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொகுப்பியக்க உயிரியல் (Systems biology) இந்நூற்றாண்டின் தொடக்கம் முதல் வேகமாக வளர்ந்து வரும் மருத்துவ மற்றும் உயிரியல் ஆய்வுத்துறையாகும். தொகுப்பியக்க உயிரியல் என்பது உயிரியலை அடிப்படையாகக் கொண்டது எனினும் பல்துறை அறிவு மற்றும் முழுமை நோக்கு மூலம் உயிரியக்கத்தின் சிக்கலான கூறுகளை அறிய முயலும் உயிரிமருத்துவ ஆராய்ச்சித் துறையாகும். குறிப்பாக 2000 முதலே இந்த கருத்து உயிரியலின் பல துறைகளிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையில் உயிரிய அமைப்புகளின் பல்வேறு கூறுகளுக்கிடையே உள்ள ஊடாடல்களையும், இத்தகு ஊடாடல்கள் உயிரிய அமைப்புகளுக்கு எவ்விதம் செயற்பாடுகளையும், தன்மையையும் அளிக்கிறது என்பதைக் குறித்து ஆய்வுகள் செய்யப்படுகிறது (உதாரணமாக நொதியங்களும், வளர்சிதைமாற்றத்தில் உருவான பொருட்களும் ஒரு வளர்சிதைமாற்றத் தடவழியில் எவ்விதம் ஊடாடுகின்றன என்பதைக் குறித்த ஆய்வுகள்)[1][2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Snoep, Jacky L; Westerhoff, Hans V (2005). "From isolation to integration, a systems biology approach for building the Silicon Cell". in Alberghina, Lilia; Westerhoff, Hans V. Systems Biology: Definitions and Perspectives. Topics in Current Genetics. 13. Berlin: Springer-Verlag. பக். 13–30. doi:10.1007/b106456. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-22968-1. 
  2. "Systems Biology: the 21st Century Science". Institute for Systems Biology. 10 ஜூன் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 June 2011 அன்று பார்க்கப்பட்டது.