உயிர்விசையியல்
உயிர்விசையியல் என்பது, விசையியல் கொள்கைகளை உயிரினங்களில் பயன்படுத்தும் ஒரு துறையாகும். உயிரினங்களின் பொறிமுறைகளையும், உயிரியல் முறைமைகளில் பொறியியல் கொள்கைகளின் பயன்பாட்டையும் ஆய்வு செய்யும் உயிர்ப்பொறியியலும் இதற்குள் அடங்குகிறது. இந்த ஆய்வுகளையும், பகுப்பாய்வுகளையும், மூலக்கூறுகள் மட்டத்திலிருந்து, திசுக்கள், உறுப்புக்கள் என்பன வரை பல மட்டங்களில் நடத்துகின்றனர். நியூட்டன் விசையியலின் சில எளிமையான பயன்பாடுகள் ஒவ்வொரு மட்டத்திலும் சரியான அண்னளவாக்க முடிவுகளைத் தரக்கூடும் ஆயினும், துல்லியமான விபரங்களைப் பெறுவதற்கு, தொடர் விசையியலைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
தாவரங்களிலும், தாவர உறுப்புக்களிலும் உயிர்விசையியல் கொள்கைகளைப் பயன்படுத்துதல் ஒரு தனியான இணைத்துறையாக வளர்ச்சியடைந்துள்லது. இது தாவர உயிர்விசையியல் எனப்படுகின்றது.
பயன்பாட்டு விசையியல் துறைகளான வெப்பஇயக்கவியல், தொடர் விசையியல், இயந்திரப் பொறியியல் துறைகளான பாய்ம விசையியல், திண்ம விசையியல் என்பன உயிர்விசையியல் ஆய்வில் முக்கிய பங்காற்றுகின்றன.[1] [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hatze, Herbert (1974). "The meaning of the term biomechanics". Journal of Biomechanics 7 (12): 189–190. doi:10.1016/0021-9290(74)90060-8.
- ↑ R. McNeill Alexander (2005) Mechanics of animal movement, Current Biology Volume 15, Issue 16, 23 August 2005, Pages R616-R619. எஆசு:10.1016/j.cub.2005.08.016