புற்றுநோயியல்
Appearance
தொழில் | |
---|---|
பெயர்கள் | மருத்துவர், சிறப்பு மருத்துவர் |
வகை | சிறப்பு மருத்துவம் |
செயற்பாட்டுத் துறை | மருத்துவம் |
விவரம் | |
தேவையான கல்வித்தகைமை | Doctor of Medicine, Doctor of Osteopathic Medicine Residency Fellowship |
தொழிற்புலம் | மருத்துவமனைகள், குறுமருத்துவ மனைகள் |
புற்றுநோயியல் (Oncology) என்பது புற்றுநோய் தொடர்பான மருத்துவத் துறை ஆகும். கிரேக்கத்தில் ஒன்கோசு (ὄγκος), என்பது திரள், பொருண்மை, அல்லது கட்டி (உயிரியல்) எனவும் -லாஜி (-λογία), என்பது "கற்கை") எனவும் பொருள்படும்; இதனைக்கொண்டே புற்றுநோயியல் ஆங்கிலத்தில் ஓன்கோலாஜி என அழைக்கப்படுகிறது. இத்துறையில் சிறப்பு மருத்துவக் கல்வி பெற்ற மருத்துவர் புற்றுநோய் மருத்துவர் அல்லது ஓன்கோலாஜிஸ்ட் என அழைக்கப்படுகிறார்.
புற்றுநோயியல் மருத்துவத்தில்:
- ஒரு நோயாளிக்கு புற்றுநோய் உள்ளதா என நோய் கண்டறிதல்
- சிகிட்சை (காட்டாக அறுவைச் சிகிச்சை, வேதிச்சிகிச்சை, கதிர் மருத்துவம் மற்றும் பிற செய்முறைகள்)
- புற்றுநோய்களை வெற்றிகரமாக குணப்படுத்திய பிறகு தொடர் கண்காணிப்பு
- இறுதிநிலை புற்றுநோய் நோயாளிகளுக்கு நோய் தணிப்பு பேணல்
- புற்றுநோய் கவனிப்பு குறித்த நன்னெறி ஐயங்கள்
- தேடிக் காணலுக்கான முயற்சிகள்:
- பொதுமக்களிடையே, அல்லது
- நோயாளிகளின் உறவினர்களிடையே (மார்பகப் புற்றுநோய் போன்ற பரம்பரை அடிப்படையில் ஏற்படுவதாக நம்பப்படும் புற்றுநோய்களுக்கு)
மேலும் அறிய
[தொகு]- Vickers, A., Banks, J., et al. Alternative Cancer Cures: "Unproven" or "Disproven"? CA Cancer J Clin 2004 54: 110-118. Full text online