மார்பகப் புற்றுநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
                 பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும்      மார்பக புற்றுநோய்   வருகிறது

உஷார்! ரேணுகா ராமகிருஷ்ணன் “சென்னை, பெங்களூரு, மும்பை... போன்ற இந்தியாவின் பிரபல விமான நிலையங்களில் ரோஸ் வண்ண பலூன்கள் அசைந்துக்கொண்டிருக்கின்றன. அதன் அருகில் ரோஸ் நிற தொப்பிகளுடன் நின்றுகொண்டிருக்கும் பெண்களிடம் கேட்டால்... “மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு” என்றதுடன் நிறுத்திக்கொள்ளாமல்... மிகப்பெரிய அதிர்ச்சி குண்டையும் வீசினார்கள். “இதுவரை பெண்களை தாக்கி வந்த மார்பக புற்றுநோய், சமீபகாலமாக ஆண்களையும் தாக்கி வருகிறது. அதிலும் சென்னைவாசிகள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்” என்பதை அழுத்தமாக பதிவு செய்தார், ரேணுகா ராம கிருஷ்ணன். சென்னை ஷெனாய் நகரை சேர்ந்தவரான இவர்... டெர்மட்டாலஜிஸ்ட். “தோல் சிகிச்சைக்கும், மார்பக புற்றுநோய்க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள். ஏனெனில் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை தோல் மருத்துவர்களால் தான் கண்டுபிடிக்க முடியும். சாதாரண சூடு கட்டிக்கும், மார்பக புற்றுநோய் கட்டிக்கும் வித்தியாசம் தெரியாது. சூடு கட்டி வலிக்கும். ஆனால் மார்பக புற்றுநோய் கட்டி வலிக்காது. இதனால் மார்பகங் களில் உண்டாகும் சிறு சிறு புற்றுநோய் கட்டிகளை பெண்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் வலிக்காத கட்டிகள், அவர் களது வாழ்க்கையில் வலிமிகுந்தவையாக மாறிவிடும். அதனால் தான் பெண்களை அடிக்கடி கண்ணாடி முன்பாக நின்று உடலை கவனிக்க சொல்கிறோம். சின்ன கட்டிகள் தென்பட்டாலும் தாமதிக்காமல் மருத்துவர்களை அணுகி தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள். இனி இத்தகைய அறிவுரைகளை ஆண்களுக்கும் வழங்கவேண்டியிருக்கிறது. ஏனெனில் சமீபகாலமாக மார்பக புற்றுநோய் ஆண்களையும் பாதிக்கிறது” என்பவர், மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது சிறந்தது என்கிறார். “மார்பக புற்றுநோய் இந்தியாவில் தான் அதிகமாக ஏற்படுகிறது. ஏனெனில் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இந்திய பெண்களிடம் அறவே இல்லை. மார்பகங் களில் உருவாக்கும் புற்றுநோய் கட்டிகளை சூடுகட்டி, வேர்குரு... என தவறாக கருது கிறார்கள். அதற்காக தான் விமான நிலையங்களில் வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். பலூன்களை பறக்கவிட்டு அனைவரின் கவனத்தை ஈர்ப்பதோடு, தெரு கூத்து, போக்குவரத்து சிக்னல் களில் மைம் நாடகங்கள் என பலவற்றை அரங்கேற்றி வருகிறோம். சமீபத்திய ஆய்வின்படி இந்தியாவில், அதிலும் குறிப்பாக சென்னையில் மார்பக புற்றுநோய் அதிகமாக பரவி வருகிறது. இதில் ஆண்களும், பெண்களும் சரி சமமாக பாதிக்கப்படுகிறார்கள். அதனால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துரிதப்படுத்தி இருக்கிறோம்” என்பவர் ‘இந்தியா டர்ன்ஸ் பிங்க்’ என்ற சமூக அமைப்பின் துணை தலைவராக இருக்கிறார். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இவர்களது முதன்மை பணி. “சென்னை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும், மற்ற கிராமங்களிலும் அமைப்பின் மூலம் மருத்துவ முகாம்களை நடத்துகிறோம். அதில் மார்பக புற்றுநோயின் தாக்கம், எப்படி உருவாகிறது, எப்படிப்பட்ட உடல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது... போன்றவற்றை வீடியோ காட்சிகளாகவும், புகைப்பட தொகுப்புகளாகவும் காண்பிக்கிறோம். இதுமட்டுமில்லாமல் கல்லூரிகளுக்கு சென்று கல்லூரி மாணவிகளிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். தற்போது இந்த பட்டியலில் கல்லூரி மாணவர்களையும் இணைத்திருக்கிறோம். அவர்களுக்கு இந்த தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது. இருப்பினும் நிலவரத்தை புரிந்து கொள்கிறார்கள். வாழ்க்கை முறையும், தட்பவெப்ப சூழ்நிலையும் பல மாற்றங்களை கொண்டு வந்திருப்பதால்... சிறு கட்டியாக இருந்தாலும்... அதை சோதித்து பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்ற கருத்துடன் முடிக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்பகப்_புற்றுநோய்&oldid=2331973" இருந்து மீள்விக்கப்பட்டது