கட்டி (உயிரியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கன்னத்தில் காணப்படும் ஒரு புத்திழையக் கட்டியாகும். இது வியர்வைச் சுரப்பியிலுள்ள ஒரு கேடில்லாத கட்டியாகும்.

கட்டி (tumor) என்பது உயிரணுக்களில் ஏற்படக்கூடிய அசாதாரண வளர்ச்சியால், வீக்கமடைந்து காணப்படும் புத்திழையம் (neoplasm) அல்லது திண்ம இழையமாகும். கட்டிகள் எல்லாமே புற்றுநோய்க் கட்டிகள் அல்ல. கேடுதரும் கட்டிகள் (Malignant tumour) புற்றுநோய்க் கட்டிகளாக இருக்கும் வேளையில், கேடில்லாத கட்டிகளும் (Benign tumour) உடலில் தோன்றும். அத்துடன் கேடுதருவதற்கு முதல் நிலையிலுள்ள கட்டிகளும் (premalignant tumour) உண்டு.
பொதுவாக அசாதரணமாக ஏற்படும் இவ்வகையான இழைய மிகைப்பெருக்கத்திற்குக் காரணம் மரபணு திடீர்மாற்றம் ஆகும். குருதிப் புற்றுநோய் போன்ற சில புத்திழையங்கள் தவிர, ஏனைய புத்திழைய வளர்ச்சிகள் எல்லாவற்றிலும் கட்டிகள் தோன்றும். உயிரகச்செதுக்கு மூலமோ, அல்லது அறுவைச் சிகிச்சை மூலம் அகழ்ந்தெடுக்கப்படும் இழைய மாதிரிகளை நோயியலாளர்கள் பார்வையிட்டு அவை கேடுதரும் புற்றுநோய்க் கட்டிகளா அல்லது கேடில்லாத கட்டிகளா எனத் தீர்மானிப்பார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டி_(உயிரியல்)&oldid=2079525" இருந்து மீள்விக்கப்பட்டது