உள்ளடக்கத்துக்குச் செல்

நீரகவழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீரகவழல்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புசிறுநீரகவியல்
ம.பா.தD009393

நீரகவழல் அல்லது சிறுநீரக அழற்சி (Nephritis) என்பது சிறுநீரகங்களில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது. இந்நோயில், திரணை (Glomerulus), நுண்குழல்கள், இவற்றைச் சுற்றியுள்ள இடைத்திசுக்கள் உட்படுத்தப்பட்டிருக்கலாம்[1].

தொடர்புடைய மருத்துவச் சீர்கேடுகள்

[தொகு]
வீக்கமடைந்த சிறுநீரகம்

வகைகள்

[தொகு]
  • திரணை நீரகவழல் (glomerulonephritis) திரணையில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது. சிறுநீரக அழற்சி என்று கூறும்போது திரணை நீரகவழல் என்பதைக் குறிப்பதாக ஆதாரங்களின் அடிப்படையிலில்லாது சாதாரணமாகக் கருதப்படுகிறது[2].
  • இடைத்திசு நீரகவழல் அல்லது நுண்குழல் இடைத்திசு நீரகவழல் (tubulo-interstitial nephritis) சிறுநீரக நுண்குழல்களுக்கிடையே உள்ள இடைவெளியில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது[3].

காரணங்கள்

[தொகு]

நோய்த்தொற்றுகள், நஞ்சுகள், முக்கியமாக முதன்மையான உறுப்புகளைத் தாக்கும் தன்னெதிர்ப்பு நோய்கள் நீரகவழல் நோய்க்குக் காரணமாக அமைகின்றன[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Keto Acids – Advances in Research and Application 2013 Edition p.220e
  2. "Glomerulonephritis: MedlinePlus Medical Encyclopedia". www.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 2015-06-14.
  3. "Interstitial nephritis: MedlinePlus Medical Encyclopedia". www.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 2015-06-14.
  4. Nephritis. http://medical-dictionary.thefreedictionary.com/Nephritis. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரகவழல்&oldid=2747135" இலிருந்து மீள்விக்கப்பட்டது