உள்ளடக்கத்துக்குச் செல்

கசிவுநீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து வெளிப்பட்ட கசிவுநீர்

கசிவுநீர் (Exudate) என்பது காயங்கள் அல்லது துளைகள் வழியாக ஒரு உயிரினம் வெளிவிடும் திரவத்தைக் குறிக்கிறது. இந்நிகழ்வு கசிவுநீர் வெளியிடுதல் எனப்படும்[1]. குருதிச் சுற்றோட்டத்திலிருந்து வடிகட்டப்பட்டு அழற்சியடைந்த அல்லது புண்ணான பகுதிகளுக்கு வரும் எந்தவொரு திரவமும் கசிவுநீர் என்றழைக்கப்படுகிறது. காயமேற்பட்டு, அதனால் தோல் வெளிப்படும்போது கசிவுநீர் குருதிக்குழல்களிலிருந்து ஒழுகி அண்மையிலுள்ள திசுக்களில் சேர்கிறது. கசிவுநீரில் ஊனீர், நாரியல் பொருள் (ஃபைப்ரின்), வெள்ளையணுக்கள் ஆகியவை உள்ளன. காயங்கள், அழற்சியடைந்த அல்லது நோய்த்தொற்று ஏற்பட்டப் பகுதிகளிலிருந்து புரதம்[2] மிகுந்த இந்நீர் கசியலாம்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "exudate". The Free Dictionary - Medical. பார்க்கப்பட்ட நாள் 5 August 2014.
  2. [1]
  3. "Exudate". MedlinePlus.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசிவுநீர்&oldid=2870099" இலிருந்து மீள்விக்கப்பட்டது