புறச்செவியழற்சி (Otitis externa, swimmer's ear) புறச்செவி, செவிக்குழல் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது[1]. இந்நிலையில் காதுகளைத் தொட்டாலோ, இழுத்தாலோ வலிக்கும்.
இடைச்செவியழற்சி (Otitis media) என்பது இடைச்செவியில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கும்[2]. சாதரணமாகக் குழந்தைகளில் இத்தகைய நோய்த்தொற்று ஏற்படுகிறது. இந்நிலையில் காதுகள் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டோ அல்லது செவிப்பறைக்குப் பின்புறம் சாதரணமாகக் காற்றினால் நிரப்பப்பட்ட இடைச்செவி வெளி, திரவத்தினால் அடைக்கப்பட்டோ காணப்படும். சிலநேரங்களில் அறுவைச் சிகிச்சைத் தேவைப்படலாம்.
உட்செவியழற்சி (Otitis interna, labyrinthitis) உட்செவியில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கும். சமநிலை, கேட்கும் திறன் ஆகியவற்றின் உணர் உறுப்புகள் உட்செவியில் உள்ளன. எனவே, கிறுகிறுப்பு (vertigo) உட்செவியழற்சியில் சாதாரணமாகக் காணப்படும் அறிகுறியாகும்[3].
↑Rapini, Ronald P.; Bolognia, Jean L.; Jorizzo, Joseph L. (2007). Dermatology: 2-Volume Set. St. Louis: Mosby. பன்னாட்டுத் தரப்புத்தக எண்1-4160-2999-0.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
↑Qureishi, A; Lee, Y; Belfield, K; Birchall, JP; Daniel, M (10 January 2014). "Update on otitis media - prevention and treatment.". Infection and drug resistance7: 15-24. doi:10.2147/IDR.S39637. பப்மெட்:24453496.