வாயழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாயழற்சி
புரதக்குறைநோய் உடையவர்கள் முடி மெலிதல், திரவக் கோர்வை, போதிய வளர்ச்சியின்மை, எடைக் குறைவு ஆகிய அறிகுறிகளைக் கொண்டுள்ளார்கள். மேலேக் காணப்படும் குழந்தையின் வாயழற்சி உடனுள்ள உயிர்ச்சத்து பி குறைப்பாட்டைக் குறிக்கிறது.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புoral medicine, தோல் மருத்துவம்
ஐ.சி.டி.-10K12.
ஐ.சி.டி.-9528.0
நோய்களின் தரவுத்தளம்27158

வாயழற்சி (Stomatitis) என்பது உதடு, வாய் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கும்[1]. வாயழற்சியானது உதடு, வாய் ஆகியவற்றில் புண்களுடனோ அல்லது புண்கள் இல்லாமலோ, சீதச்சவ்வுகளில் ஏற்படும் எல்லாவிதமான அழற்சி நிகழ்வுகளையும் குறிக்கிறது[2].

நோய்த்தொற்றுகள், உணவுக்குறைபாடுகள், ஒவ்வாமை வினைகள், கதிரியக்கச் சிகிச்சை மற்றும் பல்வேறுவிதமான காரணங்களினால் வாயழற்சி தோன்றுகின்றது. மேலும், இது பலவிதமானத் தோற்றங்களையும் கொண்டுள்ளது.

ஈறு, வாய் ஆகிய இரண்டும் பாதிப்படையும்போது ஈறு-வாயழற்சி (gingivostomatitis) என்றும், சிலநேரங்களில் ஹெர்ப்பிஸ் தீநுண்ம ஈறு-வாயழற்சி (herpetic gingivostomatitis) என்றும் அழைக்கப்படுவதுண்டு.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாயழற்சி&oldid=1870243" இலிருந்து மீள்விக்கப்பட்டது