உள்ளடக்கத்துக்குச் செல்

லுயூக்கோடிரையீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லுயூகோடிரையீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லுயூகோடிரையீன் எ4 (LTA4). நான்கு இரட்டைப் பிணைப்புகளில் மூன்று இணைக்கப்பட்டுள்ள அமைப்பு அனைத்து லுயூகோடிரையீன்களுக்கும் உள்ள ஒரு பொதுவான பண்பாகும்
லுயூகோடிரையீன் பி4 (LTB4)
லுயூகோடிரையீன் சி4 (LTC4), சிஸ்டீன் உள்ள லுயூகோடிரையீன்
லுயூகோடிரையீன் டி4 (LTD4), சிஸ்டீன் உள்ள லுயூகோடிரையீன்
லுயூகோடிரையீன் ஈ4 (LTE4), சிஸ்டீன் உள்ள லுயூகோடிரையீன்

லுயூகோடிரையீன்கள் (Leukotrienes) இயற்கையாக உருவாகும் கொழுப்பு சமிக்ஞை மூலக்கூறுகளாகும். இவை முதன்முதலாக வெள்ளை அணுக்களில் கண்டறியப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. மூச்சுக்குழலைச் சுற்றியுள்ள மென்தசைகளின் சுருக்கத்தைத் தூண்டுவது இவற்றின் பணிகளுள் ஒன்றாகும் (உதாரணமாக, லுயூகோடிரையீன் டி4; LTD4). இவை அளவுக்கு அதிகமாக உருவாகுவது ஈழைநோய், ஒவ்வாமை நாசியழற்சி மற்றும் மூச்சுக்குழல் அழற்சி நோய்களில் ஏற்படும் அழற்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது[1]. லுயூகோடிரையீன் எதிர்மருந்துகள், லுயூகோடிரையீன்களின் உற்பத்தி (அல்லது) செயல்களைத் தடுப்பதன் மூலமாக இவ்வகை நோய்களை குணப்படுத்த உபயோகிக்கப்படுகின்றன.

உயிரணுக்களில் உற்பத்தியாகும் லுயூகோடிரையீன்கள், தன்சுரப்பு அல்லது பக்கச்சுரப்பு சமிக்ஞையாக பணியாற்றி நோயெதிர்ப்பு செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன.

லுயூகோடிரையீன்கள் நம் உடலில் அராகிடோனிக் அமிலத்திலிருந்து 5-கொழுமியஉயிர்வளியேற்றி நொதியத்தால் உருவாக்கப்படுகின்றது. இவற்றின் உற்பத்தி சாதாரணமாக திசுநீர்தேக்கி உற்பத்தியுடன் நிகழ்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. David L. Nelson, Michael M. Cox. Lehninger's Principles of Biochemistry, Fifth Edition. W.H. Freeman and Co., 2008, p. 359.


"https://ta.wikipedia.org/w/index.php?title=லுயூக்கோடிரையீன்&oldid=2745247" இலிருந்து மீள்விக்கப்பட்டது