உள்ளடக்கத்துக்குச் செல்

பாஸ்போகொழுமியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஸ்போகொழுமியம்
பாஸ்போகொழுமிய மூலக்கூறின் முனைவுள்ள தொகுதி சிவப்பு நிறத்திலும்
முனைவற்ற நீர்-விலக்கும் பகுதி நீல வண்ணத்திலும் (U) கொடுக்கப்பட்டுள்ளது.
பாஸ்படைடில்-கோலின் லெசித்தின் மூலக்கூறின் முக்கிய பாகமாக உள்ளது. கோலின்வினையிய நரம்பணுக்களின் அசெட்டைல்கோலின் தொகுப்பில் உபயோகப்படும் கோலின் மூலக்கூறின் மூலமாகவும் உள்ளது.
செல் சவ்வுகள், பாஸ்போகொழுமிய இரு-அடுக்குகளைக் கொண்டுள்ளன.

பாஸ்போகொழுமியங்கள் (Phospholipids) செல் சவ்வுகளின் கொழுமிய இரு-அடுக்குகளை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் கொழுமிய மூலக்கூறு பிரிவுகளில் ஒன்றாகும். பெரும்பாலான பாஸ்போகொழுமியங்கள், டைகிளிசரைடு, ஒரு பாஸ்பேட்டு தொகுதி மற்றும் எளிமையான கரிம மூலக்கூறான கோலின் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்; ஆனால், கிளிசராலுக்கு பதிலாக ஸ்பின்கோசினிலிருந்து வருவிக்கப்பட்ட ஸ்பின்கோமையலின் மூலக்கூறு ஒரு விதிவிலக்காகும். தியோடோர் நிகோலஸ் கோப்லே என்னும் பிரெஞ்சு வேதியியலர் மற்றும் மருந்தாளுனரால் 1847-ஆம் ஆண்டு முட்டையின் மஞ்சள் கருவிலிருந்து, உயிரியப் பொருள்களில் உள்ள, முதலாவது பாஸ்போகொழுமியம் (லெசித்தின் அல்லது பாஸ்படைடில் கோலின்) அடையாளம் காணப்பட்டது. பொதுவாக பாஸ்போகொழுமிய மூலக்கூறின் வடிவத்தில் நீர்-நாடும் தலையும், நீர்-விலக்கும் பின்தொடரும் (வால் பகுதி) உள்ளது. பாஸ்போகொழுமியங்கள் வழக்கமாக இவற்றின் இடைவெளிகளில் காணப்படும் கொலஸ்டிரால் மூலக்கூறுகளுடன் காணப்படுகின்றன.

உயிரிய அமைப்புகளில் பாஸ்போகொழுமியங்கள் அடிக்கடி பிற மூலக்கூறுகளுடன் (உதாரணமாக, செல் சவ்வுகளின் கொழுமிய ஈரடுக்குகளில் புரதங்கள், கிளைக்கோகொழுமியங்கள், கொலஸ்டிராலுடன்) காணப்படுகின்றன[1].

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Campbell, Neil A. (2006). Biology: Exploring Life. Boston, Massachusetts: Pearson Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-250882-6. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்போகொழுமியம்&oldid=1568932" இலிருந்து மீள்விக்கப்பட்டது