வெண்குருதியணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெள்ளை அணுக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாதாரணமாக மனிதனின் குருதிச் சுற்றோட்டத்தொகுதி யில் காணப்படும் குருதியானது அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கியின் (Scannin electron microscope, SEM) கீழ் தெரியும் தோற்றமாகும். இதில் ஒழுங்கற்ற தோற்றத்தில் தெரியும் வெண்குருதியணுக்களுடன், செங்குருதியணுக்களும், சிறிய தட்டுவடிவமான குருதிச் சிறுதட்டுக்களும் காணப்படுகின்றன.

வெண்குருதியணுக்கள் அல்லது வெண்குருதிச் சிறுதுணிக்கைகள் அல்லது இரத்த வெள்ளையணுக்கள் அல்லது லியூக்கோசைற் (White Blood Cells or Leucocytes) குருதியில் காணப்படும் ஒரு வகை உயிரணுக்களாகும். இவை எலும்பு மச்சைகளில் தயாரிக்கப்பட்டு குருதியினால் உடல் முழுவதும் எடுத்து செல்லப்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. தொற்றுநோய்களையும், வேறு வெளிப் பொருட்களை எதிர்ப்பதிலும் முக்கிய பங்காற்றும் குருதியின் கூறாக அமையும். வெண்குருதியணுக்களின் வாழ்வுக்காலம் ஒரு சில நிமிடங்களில் இருந்து, ஒரு சில நாட்கள் வரை இருக்கும். இவ்வெண்குருதியணுக்கள் குருதிச் சுற்றோட்டத்தொகுதியிலும், நிணநீர்த்தொகுதியிலும் பரந்து உடல் முழுவதும் காணப்படும்.

வகைகள்[தொகு]

வெண்குருதியணுக்களில் ஐந்து வேறுபட்ட வகையான உயிரணுக்கள் உள்ளன[1]. ஆனால் அவை யாவும் என்பு மச்சையில் இருக்கும் குருதியணுமூலக் குருத்தணு (hematopoietic stem cell) எனப்படும் ஒரு குறிப்பிட்ட உயிரணுக்களில் இருந்தே உருவாகின்றன.

வகை நுண்ணோக்கித் தோற்றம் வரைபடம் அண்ணளவான %
வயது வந்தவர்களில்[2]
See also:
Blood values
விட்டம் (μm)[2] முக்கியமான இலக்கு[3] கரு[3] மணியுரு[3] வாழ்வுக்காலம்[2]
நடுவமைநாடிகள் PBNeutrophil.jpg Neutrophil.png 54–62%[4] 10–12 பல்மடல் நுண்ணிய, மங்கலான இளஞ்சிவப்பு நிறம் (H&E stain) 6 மணித்தியாலம்-சில நாட்கள்
( [[மண்ணீரல்|மண்ணீரலிலும், வேறு இழையங்களிலும் சில நாட்கள்)
இயோசினேற்பிகள் PBEosinophil.jpg Eosinophil 1.png 1–6% 10–12 இருமடல் முழுமையான இளஞ்சிவப்பு - செம்மஞ்சள் நிறம் (H&E Stain) 8–12நாட்கள் (4-5 மணித்தியாலங்களுக்கு சுற்றியோடும்)
காரச்சாயமேற்பிகள் PBBasophil.jpg Basophil.png <1% 12–15 இருமடல் அல்லது மும்மடல் பெரிய நீலநிறம் சில மணித்தியாலங்கள் முதல் சில நாட்கள் வரை
நிணநீர் செல்கள் Lymphocyte2.jpg Lymphocyte.png 25–33% 7–8
 • பி உயிரணுக்கள்: பிறபொருளெதிரியை வெளியேற்றுவதுடன், டி உயிரணுக்களின் தொழிற்பாட்டிற்கும் உதவும்.
 • டி உயிரணுக்கள்:
  • டி உதவி உயிரணுக்கள் (Th=T helper cells): டி உயிரணுக்கள், பி உயிரணுக்களைத் தொழிற்படச் செய்து, அவற்றை ஒழுங்கு முறைப்படுத்தும் தொழிலைச் செய்யும்
  • CD8 + செல்நச்சிய டி உயிரணுக்கள்: தீ நுண்மத் தொற்றுக்குட்பட்ட உயிரணுக்களையும், கட்டி உயிரணுக்களையும் அழிக்கும்.
  • γδ டி உயிரணுக்கள்:
  • ஒழுங்குபடுத்தும் டி உயிரணுக்கள் (Regulatory (suppressor) T cells): தொற்று நீங்கியதும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் தொழிற்பாட்டை சாதாரண நிலைக்கு கொண்டு வர உதவும்; தன்னுடல் தாக்குமை யை தடுக்கும்.
 • இயற்கையாக கொல்லும் உயிரணுக்கள் (Natural Killer = NK cells): தீ நுண்மத் தொற்றுக்குட்பட்ட உயிரணுக்களையும், கட்டிகளையும் அழிக்கும்.
அசாதாரணமான ஆழமான நிறப்படுத்தலுக்குட்படும் இயற்கையாக கொல்லும் உயிரணுக்களும், Cytotoxic (CD8+) T உயிரணுக்கள் கிழமைகள் - ஆண்டுகள்
ஒற்றை உயிரணுக்கள் Monocyte.jpg Monocyte.png 2–10% 14–17 ஒற்றை உயிரணுக்கள் குருதியிலிருந்து வேறு இழையங்களுக்குச் சென்று அங்கே கலவேறுபாட்டுக்கு உட்பட்டு பெருவிழுங்கி அல்லது கிளையி உயிரணுக்களாக மாற்றமடையும். சிறுநீரகத்தின் தோற்றத்தை ஒத்த அமைப்பு எதுவுமில்லை சில மணித்தியாலங்கள் தொடக்கம், சில நாட்கள் வரை
பெருவிழுங்கிகள் Macrophage.jpg Macrophage.png 21 (மனிதர்)[5] தின்குழியமை உயிரணுச் சிதைவுகள் அல்லது இறந்த உயிரணுக்கள், நோய்க்காரணிகள் போன்றவற்றை விழுங்கி சமிபாடு அடையச் செய்வதுடன், நோய்க்காரணிகளை எதிர்க்கும் நிணநீர் செல்கள் மற்றும் நோயெதிர்ப்பு உயிரணுக்களைத் தூண்டுவதிலும் பங்கெடுக்கும். செயல்திறனுடன்: நாட்கள்
முதிராத நிலையில்: மாதங்கள் - ஆண்டுகள்
கிளையி உயிரணுக்கள் Dendritic cell.JPG Dendritic Cell ZP.svg பிறபொருளெதிரியாக்கி - முன்வைக்கும் உயிரணுவாக (antigen-presenting cell = APC) இதன் முக்கியமான தொழில் டி நிணநீர்க்கலங்களை தொழிற்படச் செய்தலாகும் பெருவிழுங்கி போன்றது

மேற்கோள்கள்[தொகு]

 1. LaFleur-Brooks, M. (2008). Exploring Medical Language: A Student-Directed Approach, 7th Edition. St. Louis, Missouri, USA: Mosby Elsevier. பக். 398. ISBN 978-0-323-04950-4. 
 2. 2.0 2.1 2.2 Daniels, V. G., Wheater, P. R., & Burkitt, H. G. (1979). Functional histology: A text and colour atlas. Edinburgh: Churchill Livingstone. ISBN 0-443-01657-7. 
 3. 3.0 3.1 3.2 Alberts, B. (2005). "Leukocyte functions and percentage breakdown". Molecular Biology of the Cell. NCBI Bookshelf. பார்த்த நாள் 2007-04-14.
 4. http://www.wisc-online.com/objects/index_tj.asp?objID=AP14704
 5. Krombach, F., Münzing, S., Allmeling, A. M., Gerlach, J. T., Behr, J., & Dörger, M. (1 September 1997). "Cell size of alveolar macrophages: an interspecies comparison". Environ. Health Perspect. (Brogan & Partners) 105 Suppl 5: 1261–3. doi:10.2307/3433544. ISSN 00916765. பப்மெட் 9400735. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்குருதியணு&oldid=1672387" இருந்து மீள்விக்கப்பட்டது