கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
குடல்வாலழற்சி (Appendicitis) அல்லது குடல்வால் அழற்சி என்பது மனித உடலில் பயனற்ற ஒரு உறுப்பானகுடல்வாலின் வீக்கமாகும். குடல்வாலானது, பெருங்குடல் ஆரம்பிக்கின்ற இடத்தில் ஒரு சிறிய குழாய் போன்ற வடிவில் காணப்படுகிறது. நார்பொருள் குறைவாகவுள்ள உணவுப் பொருள்களை உண்ணுகின்ற நிலையிலேயே இந்த குடல்வாய் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
இவ்வாறு குடல்வால் அழற்சி ஏற்படுகின்ற பட்சத்தில் குடல்வால், அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றப்படும். ஆனாலும், காலம் தாமதமானால், குடல்வால் வெடித்து, வயிற்றறைக்குள்நோய்த்தொற்றுகள் ஏற்பட வழிகோலும். இவ்வாறு குடல்வால் வெடித்து, வயிற்றறைக்குள் தொற்றுண்டாகும் பட்சத்தில், அது வயிற்றறையுரை அழற்சி (Peritonitis) என்று வழங்கப்படுகிறது.