ஈறு அழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈறு அழற்சி
ஈறு அழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புபல் மருத்துவம்
ஐ.சி.டி.-10K05.0-K05.1
ஐ.சி.டி.-9523.0-523.1
நோய்களின் தரவுத்தளம்34517
மெரிசின்பிளசு001056
ம.பா.தD005891

ஈறு அழற்சி (Gingivitis) என்பது பல் ஈறுகளில் அழற்சியை ஏற்படுத்தும், திசுக்களில் அழிவை ஏற்படுத்தாத பல்முரசு நோயாகும்[1]. பொதுவாக ஈறு அழற்சியானது பற்களின் மேற்பரப்பில் படியும் பாக்டீரிய நுண்ணுயிர் படலங்களுக்கெதிராக (பற்காரை) விளையும் எதிர்வினைகளால் ஏற்படுவதாகும். இதைப் பற்படலத்தினால் தூண்டப்பட்ட ஈறு அழற்சி எனலாம். ஈறு அழற்சி நிலை மீளாமாற்றமல்ல. நல்ல வாய் சுகாதார முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஈறு அழற்சியிலிருந்து விடுபடலாம். என்றாலும், சிகிச்சையளிக்காவிட்டாலோ, அழற்சியினைக் கட்டுபடுத்தப்படாமல் இருந்தாலோ பல்திசு அழிவை ஏற்படுத்தி, பற்குழி எலும்பை உறிஞ்சும் பல்சூழ்திசு அழற்சியாக (Periodontitis) இது மாறி பல் இழப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுவிடும்[2].

சில மனிதர்களில் அல்லது பல்லின் சிலப் பகுதிகளில் ஈறு அழற்சியானது பல்சூழ்திசு அழற்சியாக எப்போதும் மாறுவது கிடையாது[3]. எனினும், ஈறு அழற்சி எப்போதும் பல்சூழ்திசு அழற்சி வருவதற்கு முன் ஏற்படுகின்றது என்று ஆய்வுத் தரவுகள் குறிப்பிடுகின்றன[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. The American Academy of Periodontology. Proceedings of the World Workshop in Clinical Periodontics. Chicago:The American Academy of Periodontology; 1989:I/23-I/24.
  2. "Parameter on Plaque-Induced Gingivitis". Journal of Periodontology 71 (5 Suppl): 851–2. 2000. doi:10.1902/jop.2000.71.5-S.851. பப்மெட்:10875689. 
  3. Ammons, WF; Schectman, LR; Page, RC (1972). "Host tissue response in chronic periodontal disease. 1. The normal periodontium and clinical manifestations of dental and periodontal disease in the marmoset". Journal of periodontal research 7 (2): 131–43. doi:10.1111/j.1600-0765.1972.tb00638.x. பப்மெட்:4272039. 
  4. Page, RC; Schroeder, HE (1976). "Pathogenesis of inflammatory periodontal disease. A summary of current work". Laboratory investigation; a journal of technical methods and pathology 34 (3): 235–49. பப்மெட்:765622. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈறு_அழற்சி&oldid=1893437" இலிருந்து மீள்விக்கப்பட்டது