சுகாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுகாதாரம்[தொகு]

சுகாதார பொறியியல்[தொகு]

அக்டோபர் 15 இன்று உலக கை கழுவும் நாள்.[தொகு]

2008 ஆம் ஆண்டிலிருந்து இந்த கை கழுவும் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதன் முக்கியத்துவம் அதிகம். தமிழில் சுத்தம் சுகம் தரும்; சுத்தம் சோறு போடும் என்று சுத்தத்தைப் பற்றி விதம் விதமாக பழமொழிகள் வைத்திருக்கிறோமே தவிர அவற்றைக் கடைப்பிடிக்கிறோமா என்றால் இல்லை என்றே தான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு வரும் நோய்கள் பெரும்பாலானவை கை கழுவாததாலேயே ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவமனமான டபிள்யூ எச் ஓ தெரிவிக்கிறது. வாந்தி பேதி, காலரா, சீதபேதி இவைகளுக்குப் பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை நமது நாட்டில் வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. போலியோ, தட்டம்மை, சின்னம்மை மஞ்சள்காமாலைக்குக் கூட தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதிலிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டோம். ஆனால் ஒரு சிறிய செயல் கை கழுவுதல் .அதைச் செய்யாததானால் அடிக்கடி காய்ச்சல், வயிற்றுப்போக்கு என அவதிப்படும் குழந்தைகளையும் காண்கிறோம். இதற்கு என்ன வழி? பெற்றோர்களின் சரியான வழி காட்டுதலும் ஆசிரியர்களின் கண்டிப்பான கடைப்பிடித்தலுமே இவற்றைத் தவிர்க்கும். நம்மில் பல பெரியவர்கள் கூட கழிப்பறைகளைப் பயன்படுத்திய பிறகு கைகளை சுத்தம் செய்வதில்லை. குறிப்பாக சோறூட்டும் தாய்மார்கள் இதைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். ஒவ்வொரு முறையும் எங்காவது போய் வந்த பிறகும் விளையாடிய பிறகும் கழிப்பறைகளைப் பயன்படுத்திய பிறகும் கண்டிப்பாக பெரியவர்களும் சிறியவர்களும் கைகளைக் கழுவுதலைக் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டில் தொடங்குவது தான் பிள்ளைகளின் மனதில் பதியும். இதே பழக்கம் அவர்கள் நாளை பெரியவர்களானதும் தங்கள் சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.[1] முறையாக கை கழுவுதல் மூலம் நமக்கு வரும் நோய்களை 90% வராமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அது என்ன முறையான கை கழுவுதல்? வெறும் நீரில் லேசாக கையைக் காட்டுதல் அன்று கழுவுதல். நல்ல சோப்புப் போட்டு புறங்கை, உள்ளங்கை என முழுவதும் சோப்பைப் புரட்டி பிறகு நன்றாக நீரில் கைகளைக் காட்டிக் கழுவுதலே முறையான கை கழுவுதல் ஆகும். இதற்கென சோப்புகள் விற்கின்றன. அவற்றைத்தான் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. வாங்க இயலாதவர்கள் தினமும் குளிக்கும் சோப்பு அளவு குறைந்து தூரப்போடும் முன் அவற்றை சேமித்து வைத்து ஒன்றாகச் சேர்த்து அவைகளைக் கூட கைகழுவப் பயன் படுத்தலாம்.

அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினம்.[தொகு]

நாளை அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினம். அதாவது ஆரோக்கியமான உணவு வகைகளை மட்டுமே உண்ண வேண்டும் என்ற கருத்து பரவும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் நாம் இன்று சாப்பிடும் உணவு எவ்வளவு ஆரோக்கியமானதாக சுத்தமானதாக இருக்கிறது? இட்லி தோசை என்பவை மறைந்து போய் பிரெட், பீட்சா, சமோசா, பஜ்ஜி என்று எண்ணெயில் பொரித்த பண்டங்களின் ஆக்கிரமிப்புத்தான் அதிகமாக இருக்கிறது. இவைகளை விற்கும் கடைகளின் சுகாதாரச் சீர்கேட்டைப் பற்றி சொல்லவே முடியாது. ஆனாலும் பொதுமக்கள் மிகவும் விரும்பி வாங்கி சாப்பிட்டு அவதிக்கு ஆளாகிறார்கள். சுத்தமும் உணவுப் பழக்கமும் இரட்டைக் குழந்தைகள். அதனால் தான் இந்த தினங்களை அடுத்தடுத்த நாளில் வைத்திருக்கிறார்கள். இன்று நடுத்தர வயதைச் சேர்ந்த பெரும்பான்மையோர் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் என பல நோய்களால் அவதிப்படுகிறார்கள். இதற்கு உணவுப் பழக்கமே காரணம். காலையில் இட்லி அல்லது தோசை, மதியம் ஒரு வேளை சாப்பாடு காய்கறிகளோடு, இரவு மீண்டும் கஞ்சி இவை தான் நமது முன்னோர் நமக்கு வகுத்துக் கொடுத்த உணவுப்பழக்கம். ஆனால் நாம் அவற்றைக் காற்றில் பறக்க விட்டு விட்டு இரவு நேரத்தில் வெகு நேரம் கழித்து மிக அதிகமான எளிதில் செரிக்காத உணவை உண்ணுகிறோம். அதன் விளைவு சர்க்காரை வியாதி மற்றும் உயர் ரத்த அழுத்தம். நல்ல உணவு தான் நமது வாழ்க்கையின் அடிப்படை. வேக வைத்த காய்கறிகள் , பழங்கள் இவைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். அசைவ உணவு விரும்புவோர் கூடுமானவரை இரவில் அவற்றை உண்பதைத் தவிர்த்தல் நல்லது. அதோடு எண்ணெயில் பொரிக்காமல் குழம்பு போலச் செய்து சாப்பிடலாம். மறந்து போன சிறு தானியங்களான வரகு, சாமை, குதிரை வாலி கேழ்வரகு இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல ஆரோக்கியம் பேணலாம். ரத்த சோகை என்ற வியாதியே வராது. இன்றும் நாளையும் நமது குடும்பத்தினருக்கு கை கழுவும் பழக்கத்தையும் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தின் அவசியத்தையும் எடுத்துச் சொல்லுவோம். பல வீடுகள் சேர்ந்தது தான் ஒரு ஊர். பல ஊர்கள் சேர்ந்தது தான் நாடு. அதனால் வீடுகள் முதலில் திருந்தினால் நாடு தானாக மாறும். இன்று முதல் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் முறையாகக் கை கழுவும் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்து அதைச் செய்யச் சொல்லுவோம். அதோடு ஆரோக்கிய உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்து நீண்ட நல் வாழ்க்கையைப் பெறுவோம்.Jump up ^ EUROPEAN SANITARY REFORM.; The British Sanitary Legislation, The New York Times, July 31, 1865


சான்றுகள்[தொகு]

  1. Jump up ^ Sanitary Reform of London, The Working Collection of Sir Joseph Bazalgette, British and Commonwealth Literary Studies, Green Library, Stanford University
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகாதாரம்&oldid=2346857" இருந்து மீள்விக்கப்பட்டது