பயன்பாட்டு அறிவியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பின்வரும் தலைப்பின் பிரிவுகள் |
அறிவியல் |
---|
![]() |
பயன்பாட்டு அறிவியல் (Applied science) என்பது அறிவியல் கொள்கைகளின் அடிப்படையில் நாம் விரும்பக்கூடிய பயன்பாடுகளுக்கும் பயன்படுமாறு வளர்த்தெடுக்கப்படும் அறிவியல். இது பயன்பாட்டு ஆய்வு (Applied research) என்றும் பயன்முக அறிவியல் (இலங்கை வழக்கு: பிரயோக விஞ்ஞானம்) என்றும் அழைக்கப்படுகிறது. பயன்பாட்டு அறிவியலில் நடைமுறை இடர்ப்பாடுகளை போக்குவதும்(எடுத்துக்காட்டாக ஒரு ஆற்றைக் கடக்க பாலம் அமைப்பது), பொருள் சிக்கனமாகப் பயன்படுத்துதலும், பிற கெடுதிகள் வாராமல் வகுதிகள் (design) செய்வதும் எப்படி என்று சில இயற்கை வழியாகவும் செயற்கை வழியாகவும் சிந்தித்து அறிவியல் முறைகளை கையாள்வது வழக்கம். பொறியியலும், மருத்துவமும், மருந்தியலும், வேளாண்மையு போன்ற துறைகள் பயன்பாட்டு அல்லது பயன்முக அறிவியல் துறைகளில் சிலவாகும். பயன்முக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கிறது.
துறைகள்[தொகு]
- பயன்பாட்டுக் கணிதம்
- பயன்பாட்டு இயற்பியல்
- மருத்துவம்
- மருந்தியல், மருந்துநுட்பியல்
- வேளாண்மை அறிவியல்
- மின்னியல்
- ஒளியியல்
- நானோ தொழில்நுட்பம்
- குறைக்கடத்தி நுட்பியல்
- அணுக்கருத் தொழில்நுட்பம்
- செயற்கை அறிவாண்மை
- தொல்பொருளியல்
- கணினியியல்
- ஆற்றலியல்
- ஆற்றல் தேக்கம்
- சுழலியலும், பொறியியலும்
- சுழலிய தொழில்நுட்பம்
- மீன்பிடிப்பியல்
- வனவியல்
- பொருளறிவியல்
- நுண் தொழில்நுட்பம்