நலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நலம் (Health) என்பது "நோயின்மையும், நலிவற்ற நிலையும் மட்டுமன்றி முழுமையான உடல், உள, சமூக நன்னிலை ஆகும்." என 1948ல் உலக நல அவை (World Health Assembly) வரைவிலக்கணம் கொடுத்துள்ளது. இந்த வரைவிலக்கணம் இன்றும் பரவலாகப் பயன்படுகின்றது. எனினும், இதனோடு, உலக நல நிறுவனத்தின் (World Health Organization) ஒட்டாவா நல மேம்பாட்டுப் பட்டயம் (Ottawa Charter for Health Promotion) போன்ற ஆவணங்களில் கொடுத்துள்ள வரைவிலக்கணங்களும் பயன்படுகின்றன. மேற்படி பட்டயம், நலம் அன்றாட வாழ்கைக்கான ஒரு மூல வளமேயன்றி வாழ்வின் நோக்கமே அதுவல்ல என்றும் அது தனிப்பட்ட, சமூக வளங்களுக்கும், உடற் தகுதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நேர்க் கருத்துரு என்றும் கூறுகிறது.

வகைப்பாட்டு முறைகளும் நலம் என்பதை விளக்குகின்றன. உலக வகைப்பாட்டு முறைகள் குடும்பம், செயல்பாடு, ஊனம், நலம் என்பவற்றுக்கான அனைத்துலக வகைப்பாடு (International Classification of Functioning, Disability and Health), அனைத்துலக நோய்கள் வகைப்பாடு என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.

நலம் சமூகத்தின் பல்வேறு கூறுகளால் தீர்மானிக்கப்படுகிறது. உயிரிய, சூழலியல், வாழ்விய, சமூக, அரச, பொருளாதார காரணிகள் ஒருவரின், அவர்சார்ந்த சமூகத்தின் நலத்தை தீர்மானிக்கிறது. ஒருவர் உணவு, உடற்பயிற்சி, கல்வி, உறவுகள், சமூகத் தொடர்புகள், வீட்டு வேலைச் சூழல், மருத்துவ சேவைகள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் என பல நுண்ணிய கூறுகள் ஒருவரின் நலத்தை தீர்மானிக்கின்றன. அதனால் நலம் என்பதை நோய், நோயை குணப்படுத்தல் என்ற குறுகிய வரையறைக்குள் விளக்க முடியாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நலம்&oldid=2226251" இருந்து மீள்விக்கப்பட்டது