வன்கூடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அருங்காட்சியகம் ஒன்றில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு குதிரையினதும், மனிதனதும் எலும்புக்கூடு

உயிரியலில், வன்கூடு என்பது (அல்லது பொதுவாக எலும்புக்கூடு என்று அழைக்கப்படுவது), விலங்குகளின் உடலைத் தாங்குவதற்கான வலுவானதும், பெரும்பாலும் கடினத்தன்மை கொண்டதுமான ஒரு சட்டகம் ஆகும். இது விலங்கின் உடலை நேராக வைத்திருப்பதுடன், அதற்கு வடிவத்தையும் வலுவையும் கொடுக்கிறது. வன்கூடு புறவன்கூடாகவோ, அல்லது அகவன்கூடாகவோ இருக்கலாம். ஆமை போன்ற விலங்குகளில் அகவன்கூடு, புறவன்கூடு இரண்டும் காணப்படும்.

புறவன்கூடு[தொகு]

முதன்மைக் கட்டுரை: புறவன்கூடு

புறவன்கூடு என்பது உடலின் உள்ளாக இருக்கும் மென்மையான பாகங்கள், உடல் உறுப்புக்கள் அனைத்தையும் மூடி வெளிப்பக்கமாக இருந்து அவற்றிற்கு பாதுகாப்பை வழங்குவதாகும். இது பொதுவாக பல முதுகெலும்பிலிகளில் காணப்படும். ஓடுடைய இனங்கள் (Crustaceans), பூச்சிகள் போன்றவற்றை உள்ளடக்கிய கணுக்காலிகளில் இருக்கும் புறவன்கூடானது, அவற்றின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தோல்கழற்றல் (moulting) மூலம் அகற்றப்படும். புறவன்கூடானது வெவ்வேறு உயிரினங்களில் வெவ்வேறு பொருட்களினால் ஆனதாக இருக்கும். கணுக்காலிகளின் வன்கூடு கைட்டினால் ஆனதாகவும், பவளம், மெல்லுடலிகளில் இருக்கும் வன்கூடு கல்சியத்தினால் ஆனதாகவும், Radiolaria எனப்படும் புரோட்டோசோவாக்களில் வன்கூடானது சிலிக்கேற்றினால் ஆனதாகவும் இருக்கும். பூச்சிகளில் இருக்கும் வன்கூடானது அவற்றிற்குப் பாதுகாப்பை அளிப்பதுடன், அவற்றின் தசைகள் இணையும் மேற்பரப்பாகவும், அவற்றில் நீரிழப்பு ஏற்பட்டு உலர்ந்துவிடாமல் தடுக்கும் அமைப்பாகவும், சூழலுடன் தொடபு கொள்ளும் புலன் உறுப்பாகவும் தொழிற்படும்.

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்கூடு&oldid=2220607" இருந்து மீள்விக்கப்பட்டது