ஆமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆமை
Tortoise.aldabra.750pix.jpg
ஒரு அல்தாப்ரா பேராமை (Geochelone gigantea)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: ஊர்வன
வரிசை: கடல் ஆமை
துணைவரிசை: Cryptodira
பெருங்குடும்பம்: Testudinoidea
குடும்பம்: Testudinidae
Genera

Astrochelys
Chersina
Cylindraspis (extinct)
Dipsochelys
Geochelone
Gopherus
Homopus
Indotestudo
Kinixys
Malacochersus
Manouria
Psammobates
Pyxis
Stylemys (extinct)
Testudo

ஆமைகள் அல்லது நில ஆமைகள் (Tortoises) என்பவை டெஸ்டியுடினிடே (Testudinidae) என்னும் குடும்பத்தைச் சார்ந்த நிலத்தில் வாழும் ஊர்வன உயிரினமாகும். நில ஆமைகளின் மேலோடு அவற்றை ஒத்த கடல்வாழ் இனங்களைப் போல இரை தின்னிகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது. ஓட்டின் மேல் பாகம் பரிசைமூடியாகவும் கீழ் பாகம் மார்புப்பரிசமாகவும் விளங்குகிறது. இந்த இரண்டும் ஒரு பாலத்தின் மூலம் இணைந்துள்ளன. ஆமை அகவங்கூடு மற்றும் வெளிவங்கூடு இரண்டும் உடையது. ஆமைகளின் அளவானது சில சென்டிமீட்டரில் இருந்து இரண்டு மீட்டர் வரை வேறுபடுகிறது. தம்மைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலைகளைப் பொறுத்து ஆமைகள் பகலில் நடமாடும் விலங்குகளாகவும் மங்கிய ஒளியில் நடமாடுவதாகவும் இருக்கின்றன. ஆமை பொதுவாகத் தனிமையை விரும்புக்கூடிய உயிரினமாகும்.

கடலாமைகள், ஆமைகள், உணவு ஆமைகள்[தொகு]

வயது வந்த ஆண் ஆமை, தென்னாப்பிரிக்கா

டெஸ்டியுடைன்ஸ் என்னும் பிரிவில் இருக்கும் உறுப்பினர்கள் அனைத்தையும் குறிப்பதற்குப் பரவலாக கடலாமை என்னும் சொல் பயன்படுத்தப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை உணவு ஆமைகள், ஆமைகள் அல்லது கடல் ஆமைகள் எனக் குறிப்பிடும் வழக்கமும் உள்ளது. குறிப்பாகச் சொன்னால், இந்த மாறுபட்ட சொற்களின் பயன்பாடானது, பயன்படுத்தப்படும் ஆங்கிலத்தின் வகையைச் சார்ந்துள்ளது.

 • பிரித்தானிய ஆங்கிலம், இந்த ஊர்வன விலங்குகளை, கடலில் வாழும் ஆமைகளைக் கடலாமைகள் என்றும் ஆறு அல்லது உப்பு நீரில் வாழ்வனவற்றை உணவு ஆமைகள் என்றும் நிலத்தில் வாழும் ஆமைகளை சாதாரண ஆமைகள் எனறும் விரித்துரைக்கிறது. எனினும், இதற்கு விதிவிலக்காக அமெரிக்கா அல்லது ஆத்திரேலியப் பொதுப் பெயர்கள் பரவலாக வழக்கில் இருக்கும் இடங்களில், பறக்கும் ஆற்று ஆமை என்பது போன்ற சில பெயர்களும் உள்ளன.
 • அனைத்து ஆறு, குளங்களில் வாழும் இனங்களுக்கும் மற்றும் சில நில-வாழ் இனங்களுக்கும் கடலாமை என்னும் பெயரையே அமெரிக்க ஆங்கிலம் பயன்படுத்த முற்படுகிறது. (எ.கா. பெட்டி ஆமைகள்) கடல் வாழ் ஆமைகள் வழக்கமாக கடல் ஆமைகள் என்று குறிப்பிடப்படுகின்றன; ஆமை என்னும் பெயர் டெஸ்டியுடினிடே என்னும் குடும்பத்தைச் சார்நத மெய்யான ஆமைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உணவு ஆமைகள் என்னும் சொல் உப்பு நீரில் வாழும் மாலாக்ளெமிஸ் டெரபின் என அழைக்கப்படும் வைரமுதுகு உணவு ஆமைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் பெயராகும். இந்த டெரபின் என்னும் சொல்லானது இந்த விலங்கைக் குறிப்பிடும் அல்காங்கியன் மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்.[1]
 • ஆஸ்திரேலிய ஆங்கிலம், கடல் மற்றும் ஆற்று நீர் வாழ் இனம் ஆகிய இரண்டிற்குமே கடலாமை என்னும் பெயரைப் பயன்படுத்துகிறது. ஆனால் நில வாழ் இனங்களுக்கு ஆமைகள் என்னும் பெயரைப் பயன்படுத்துகின்றது.

இந்தக் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக, செலோனியா என்னும் சிறப்புப் பிரிவைச் சார்ந்த எந்த உறுப்பினருக்கும் பொருந்தும் பெயராக செலோனியன் என்னும் வார்த்தை இந்த விலங்குகளோடு தொடர்புடைய கால்நடை மருத்துவர்கள், அறிவியலாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஆகிய அனைவர் இடையிலும் பரவலாக உள்ளது. இது அனைத்து வகை வாழும் மற்றும் அழிந்து விட்ட இனங்களான கடலாமைகள், ஆமைகள் மற்றும் உணவு ஆமைகள் மற்றும் அவற்றின் உடனடி முன்னோர்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இது கடலாமை/ஆமை என பொருள்படும் பண்டைய கிரேக்கச் சொல்லான χελώνη, செலோன் நவீன கிரேக்க χελώνα, செலோனா என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

உயிரியல்[தொகு]

பிறப்பு[தொகு]

இளைய ஆமை

பெண் ஆமைகள் கூட்டு வளைகளைத் தோண்டுகின்றன; அதில் அவை, ஒன்றில் முதல் முப்பது முட்டைகள் வரை இடுகின்றன.[2] இவ்வாறு முட்டையிடும் செயலானது, குறிப்பாக இரவில்தான் நடைபெறுகிறது. இதன் பின்னர் தாய் ஆமை தனது முட்டைகளை மணல், மண் மற்றும் உயிரினப்பொருட்களைக் கொண்டு மூடுகிறது. இந்த முட்டைகள் தனித்து விடப்படுகின்றன. ஒரு ஆமை எந்த இனத்தைச் சார்ந்தது என்பதைப் பொருத்து முட்டைகள் பொரிவதற்கு அறுபதில் இருந்து நூற்றியிருபது நாட்கள் வரை ஆகும்.[3] முட்டையின் அளவு தாயின் அளவைப் பொருத்து இருக்கும்; மேலும் பரிசைமூடி மற்றும் மார்புப்பரிசத்திற்கு இடையில் இருக்கும் பொதுக் கழிவாயின் அகலத்தை ஆய்வதன் மூலம் முட்டையின் அளவைக் கணக்கிட முடியும். முட்டைகள் சுலபமாக வெளி வருவதற்காக, ஒரு பெண் ஆமையின் மார்புப் பரிசத்தில் வாலுக்கு கீழே புலப்படக்கூடிய (ஆங்கில எழுத்தான) வி-வடிவ இடர்பாதை ஒன்று இருக்கும். அடைகாக்கும் காலம் முடிவடைந்த பின்னர், முழுதாக உருவமடைந்த ஆமைக்குஞ்சு தனது ஓட்டை உடைத்துக் கொண்டு வர முட்டைப்பல்லைப் பயன்படுத்துகிறது. அது கூட்டின் மேற்பரப்பிற்கு தோண்டிக் கொண்டே வந்து வெளியேறித் தனது வாழ்க்கையைத் தானே துவக்குகிறது. ஆமைக் குஞ்சுகள் மூல உரு முட்டைப் பையுடன் பிறக்கின்றன. இது அவை தாமே உணவு தேடிக்கொள்ளும் ஆற்றலையும் இயக்கத்தையும் பெறுகின்ற வரையிலும், அவற்றின் முதல் மூன்றில் இருந்து ஏழு நாட்கள் வரை, ஊட்டச்சத்திற்கான ஒரு மூலமாகப் பயன்படுகிறது. இளைய ஆமைகளுக்கு வயது முதிர்ந்த ஆமைகளை விட வேறுபட்ட, சமச்சீருடைய ஊட்டச்சத்து தேவைப்படுகிறது, எனவே ஒரு முதிர்ந்த ஆமை உண்ணாத உணவுகளையும் இவை உண்ணக்கூடும். எடுத்துக்காட்டாக, தாவரங்கள் மட்டுமே உண்ணும் இனம் சார்ந்த ஒரு இளைய தலைமுறை, கூடுதல் புரதச்சத்திற்காக புழுக்கள் அல்லது பூச்சிகளின் முட்டைப்புழு ஆகியவற்றை உண்பது பொதுவானதாக உள்ளது.

வாழ்நாள்[தொகு]

கலிப்போர்னியாவின் பார்ஸ்டோ நகரத்தின் அருகில் உள்ள ரெயின்போ பள்ளத்தாக்கில் பாலைவன ஆமை

கடலாமைகள் மற்றும் ஆமைகள் ஆகியவற்றின் வயதைப் பற்றி கர்ண பரம்பரைக் கதைகள் உண்டு; அவற்றில் ஒன்று மரத்தின் குறுக்குவாட்டில் இருப்பதைப் போல, ஒரு ஆமையின் வயதினை அதன் பரிசைமூடி மேல் இருக்கும் வளையங்களின் எண்ணிக்கையைப் பொருத்து அறிந்து கொள்ளலாம் என்பதாகும். ஒரு ஆமையின் வளர்ச்சி அதற்கு உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதையே சார்ந்தது என்பதால் இந்தக் கதைகள் உண்மையானவை அல்ல. பல நாட்கள் உண்ணமுடியாத நிலையில் இருக்கும் பாலைவனத்து ஆமையை விட, அதிகத் தீவனம் கிடைக்கப் பெறும் (அல்லது அதன் உரிமையாளரால் நன்றாக உணவளிக்கப்படும்) ஒரு ஆமையானது விரைவான வளர்ச்சி அடையும்.

மனிதர்களுடன் ஒப்பிடுகையில், ஆமைகள் நீண்ட வாழ்நாள் உடையதாய் இருக்கின்றன; மற்றும் சில ஆமைகள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றன. இதன் காரணமாக, சீனப் பண்பாட்டில் இவை நீண்ட வாழ்நாளின் சின்னமாக விளங்குகின்றன. இதுவரை பதிவு செய்யப்பட்டவற்றிலேயே மிகவும் முதிய ஆமை, அதிலும் மிகவும் முதிய விலங்கினம் என்பதானது, 1777ஆம் ஆண்டில் பிறந்து சில நாட்களில் டாங்காவின் அரச குடும்பத்துக்கு பிரித்தானிய ஆய்வாளர் காப்டன் குக் என்பவரால் பரிசளிக்கப்பட்ட டுயி மாலிலா என்னும் ஆமையாகும். 1965ஆம் ஆண்டு மே மாதம் 19 அன்று இயற்கையாக மரணம் அடையும் வரையிலும், டுயி மாலிலா டாங்காவின் அரச குடும்பத்தின் கவனிப்பில் இருந்து வந்தது. இறக்கும் பொழுது டுயி மாலிலாவின் வயது 188 ஆண்டுகளாகும்.[4] தனது 226 ஆண்டு வாழ்நாளை 1977வது ஆண்டு சூலை 17ஆம்தேதி முடித்துக்கொண்ட ஹனாகோ என்னும் பெயர் கொண்ட மற்றொரு முள்ளந்தண்டு விலங்கான கோயி வகை மீன் மட்டுமே, நீண்ட காலம் வாழ்ந்த இந்தச் சாதனையை முறியடித்துள்ளது.[5]

இந்தியாவின் அலீப்பூர் உயிரியல் பூங்காவில் அத்வாய்தா என்னும் விலங்கு வாழ்ந்து வந்தது. 2006வது ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி இறக்கும் வரை இதுவே வாழும் விலங்குகளில் மிக முதிர்ந்ததாக இருந்தது என்று இந்தப் பூங்காவின் அலுவலர்கள் கூறுகின்றனர். அத்வாய்தா என்பது (சில சமயங்களில் இரண்டு 'த' எழுத்துக்களைச் சேர்த்து எழுதப்படுகிறது) அல்டாப்ரா தீவின் ஒரு இராட்சத ஆமையாகும். இது 1875ஆம் ஆண்டு அலீப்பூர் உயிரியல் பூங்கா தொடங்கியபோது லார்ட் வெல்லெஸ்லி இதனை இந்தியாவுக்கு கொண்டு வந்து இந்தப் பூங்காவிற்கு அளித்தார். அத்வாய்தாவின் வயது குறைந்த பட்சமாக 130 என்பதாகவாவது இருக்கும் என்பதற்குத் தங்களிடம் ஆவணங்கள் இருப்பதாகப் பூங்கா அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால் அது 250 வயதுடையதாக இருக்கும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர் (எனினும் இது அறிவியல் முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல ). அத்வாய்தா ராபர்ட் கிளைவின் செல்லவிலங்காக இருந்ததாகக் கூறப்படுகிறது.[6]

குவீன்சுலாண்டில் உள்ள ஆத்திரேலிய உயிரியல் பூங்காவில் வசிக்கும் ஹாரியெட், பீகிள் என்னும் போர்ப்படைக் கப்பலில் சார்ல்ஸ் டார்வின் இங்கிலாந்திற்கு வரவழைத்தார் எனக் கூறப்படுவதுண்டு. ஹாரியெட், தனது 176வது பிறந்த நாளுக்குச் சில நாட்களே இருக்கையில், 2006வது ஆண்டு சூன் மாதம் 23ஆம் தேதி இறந்தது.

டிமோதி என்னும் குதிமுள்-தொடை ஆமை, ஏறத்தாழ 165 வருடங்கள் வரை உயிர் வாழ்ந்தது. 38 வருடங்களுக்கு பிரிட்டனின் ராயல் கப்பற்படையின் பல்வேறு கப்பல்களில் அது ஒரு நற்சின்னமாகக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் 1892ஆம் வருடம், தனது 53வது வயதில் ஓய்வு அளிக்கப்பட்டு டெவான் நாட்டின் பௌடர்ஹாம் கோட்டையில் இறக்கி விடப்பட்டது. 2004வது வருடம் உயிர் நீக்கும் வரை, அதுவே யுகேயின் முதிர்ந்த உயிர்வாழினம் என்று நம்பப்பட்டது.

டெய்லி மெயில் மற்றும் டைம்ஸ் பத்திரிகைகளில் 2008வது ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கட்டுரைகளின்படி, செயின்ட் ஹெலெனாவில் வசிக்கும் ஸெசெல்ஸ் இராட்சத ஆமை]]யான ஜோனாதான் 176[7] அல்லது 178 வருடங்கள் வயதுடையதாக இருக்கலாம்.[8] இது உண்மையாக இருப்பின், இதுவே தற்பொழுது பூமியில் வசிக்கும் விலங்குகளில் மிக வயது முதிர்ந்த விலங்காக இருக்கும்.

ஈருருப் பாலின அமைப்பு[தொகு]

ஒவ்வொரு இனத்திலும் ஆண்பால் மற்றும் பெண்பால் ஆகியவற்றின் அமைப்புக்கள் மாறுபடுகின்றன எனினும், பல ஆமையினங்கள் ஈருருப் பாலின அமைப்பு கொண்டுள்ளன. ஆயினும், அனைத்து ஆமையினமும் இவ்வாறே உள்ளதாகக் கூற இயலாது. சில இனங்களில், ஆண் ஆமைகள் அவ்வினம் சார்ந்த பெண்ணினத்தை விட நீளமான, அதிகம் துருத்திக்கொண்டிருக்கும் கழுத்தினைக் கொண்டுள்ளன. ஆனால் சிலவற்றில் பெண் ஆமைகள் நீண்ட வளைநகங்கள் கொண்டுள்ளன.

பெரும்பான்மையான ஆமையினங்களில், பெண்ணினம் ஆணினத்தை விடப் பெரியதாக இருப்பதான ஒரு போக்கு தென்படுகிறது. ஆண் ஆமைகள் வேகமாக வளர்வதாகவும், பெண் ஆமைகள் மெல்ல, ஆனால் பெரியதாக, வளர்வதாகவும் சிலர் நம்புகின்றனர். இனப்பெருக்கத்திற்கு உதவி புரியும் வண்ணம், ஆணினத்திற்கும் உட்பக்கமாக வளைந்திருக்கும் மார்புப்பரிசம் இருக்கிறது. ஒரு ஆமையின் பாலினத்தை அறிந்து கொள்வதற்கு மிக எளிதான வழி அதன் வாலை உற்று நோக்குவதே. ஒரு பொதுவான விதியாக, பெண்ணினம் கீழ் நோக்கியிருக்கும் ஒரு சிறிய வாலை கொண்டுள்ளது. ஆனால், ஆணினத்தின் வால் மேல் நோக்கிப் பின் ஓட்டின் பக்கவாட்டில் திரும்புவதாக அமைந்துள்ளது.

பொதுவான தகவல்[தொகு]

இராட்சத ஆமைகள் உலர்ந்த நிலத்தில் மிக மெதுவான 0.17 miles per hour (0.27 km/h) வேகத்திலேயே நகர்கின்றன.[9]

உணவு விதிமுறை[தொகு]

பச்சடிக்கீரையை உண்ணும் ஒரு குட்டி ஆமை.

நிலத்தில் வாழும் ஆமைகளில் பெரும்பான்மையானவை, தாவர உண்ணிகளாகும். இவை புற்கள், விதைகள், இலைகள் கொண்ட பச்சைக் காய்கறிகள், பூக்கள் மற்றும் சில பழங்கள் ஆகியவையே உண்ணுகின்றன. செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் ஆமைகளுக்கு, குறிப்பாக காட்டுப் புற்கள், விதைகள் மற்றும் சில குறிப்பிட்ட பூக்களை கொண்ட உணவே தேவைப்படுகிறது. சில ஆமை இனங்கள் புழுக்கள் அல்லது பூச்சிகளை உண்ணுகின்றன. ஆனால் அதிக புரதச்சத்தானது, ஓடு உருக்குலைதல் மற்றும் வேறு மருத்துவப் பிரச்னைகளை விளைவிக்கும் அளவிற்கு தீங்கு நிறைந்ததாகும். பூனை அல்லது நாயின் உணவுகள் ஆமைக்கு அளிக்கப்படக்கூடாது. ஏனெனில் இவற்றில் ஒரு ஊர்வன இனம் சார்ந்த விலங்கிற்குத் தேவையான ஊட்டச்சத்து சமச்சீராக இருப்பதில்லை. குறிப்பாக, இது புரதச்சத்து மிகுந்ததாகவும் உள்ளது. மேலும், சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து ஆமைகளுக்குமே ஒரே மாதிரியான உணவுதான் தேவைப்படும் என்றும் எண்ணக்கூடாது. பல்வேறு ஆமை இனங்களும், தங்களது ஊட்டச்சத்துக்கான தேவைகளில் அதிகம் மாறுபடுவதால், ஆமைக்கு தேவையான உணவு முறைகள் முழுவதையும் ஆராய்ந்து அறிந்து கொள்வது அத்தியாவசியம் ஆகும். விற்கப்படும் மாத்திரைகள் எதுவுமே ஆமைகளுக்கு அளிக்கப்படக்கூடாது; அவற்றில் ஊட்டச்சத்துக்கள் இருப்பதாகப் பறைசாற்றப்பட்டாலும், உண்மையில் ஆமைக்குத் தேவையான எந்த விதமான ஊட்டச்சத்தும் அவற்றில் இருப்பதில்லை. இத்தகைய மாத்திரைகளில் பல, உணவுக்குழாயைச் சேதப்படுத்தி, மூச்சுத்திணறலில் தொடங்கி மெல்ல, வலியுடன் கூடிய மரணத்தை விளைவிக்கக்கூடியன. செலோனியன் பராமரிப்பில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஒரு தகுதியான கால்நடை மருத்துவரைக் கலந்தாலோசிப்பதே, இவற்றிற்குப் பொருத்தமான உணவு முறையைத் தீர்மானிப்பதற்குச் சிறந்த வழியாகும்.

வகைத் தொகுப்பு[தொகு]

கீழ்க்காணும் ஆமையினப் பட்டியலானது, பெரும்பாலும் எர்ன்ஸ்ட் & பார்பர் (1989) வகைப்படுத்தலின் அடிப்படையில், ஊர்வன பற்றிய தரவுத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், புதிதாக வகுக்கப்பட்ட இன வகைகளான அஸ்ட்ரோகெலிஸ் , செலோனோய்டிஸ் மற்றும் ஸ்டிக்மோசெலிஸ் ஆகியவை ஜியோசெலோன் என்னும் பிரிவுக்குள்ளேயே தக்க வைக்கப்பட்டுள்ளன.

ஆமையின் எலும்புக்கூடு
அழிந்துவிட்ட எர்கிலெமிஸ் இன்ஸோலிடஸ் என்னும் இனத்தின் உயிரெச்சப் பதிவுகள்
அகிலெமிஸ் கஸௌலெடி. மிகவும் முற்காலத்திய டெஸ்டியுடைன்[10]
 • செர்ஸினா
  • செர்ஸினா அங்குலாடா , பாய்மரக்குழி ஆமை
 • சிலின்ட்ராஸ்பிஸ் (அனைத்து இனங்களும் அழிந்து விட்டன)
  • சிலின்ட்ராஸ்பிஸ் இண்டிகா , ஒத்த சொல் சிலின்ட்ராஸ்பிஸ் பார்பானிகா
  • சிலின்ட்ராஸ்பிஸ் இனெப்ட்
  • சிலின்ட்ராஸ்பிஸ் பெல்டேஸ்ட்ஸ்
  • சிலின்ட்ராஸ்பிஸ் ட்ரைஸெரட்டா
  • சிலின்ட்ராஸ்பிஸ் வோஸ்மேரி
 • டிப்ஸோகெலிஸ்
  • டிப்ஸோகெலிஸ் அப்ரப்டா (அழிந்து விட்ட இனம்)
  • டிப்சோகெலிஸ் அர்னால்டி , அர்னால்டின் இராட்சத ஆமை
  • டிப்ஸோகெலிஸ் டௌடினி (அழிந்து விட்ட இனம்)
  • டிப்ஸோகெலிஸ் டுஸிமியெரி , அல்டாப்ரா இராட்சத ஆமை, பொதுவான வேறு பெயர்கள் ஜியோசெலோன் ஜைஜாண்டியா, அல்டாப்ராகெலிஸ் ஜைஜாண்டியா
  • டிப்ஸோகெலிஸ் கிரான்டிடியெரி (அழிந்து விட்டது)
  • டிப்ஸோகெலிஸ் ஹோலோலிஸ்ஸா , ஸீசெல்ஸ் இராட்சத ஆமை
 • ஜியோசெலோன்
  • ஜியோசெலோன் கார்போனேரியா , சிவப்புப்-பாத ஆமை; சில நேரங்களில் செலோனாய்டிஸ் என்னும் வேறொரு மரபுப் பிரிவின் கீழ் பட்டியலிடப்படுகிறது.
  • ஜியோசெலோன் சிலென்ஸிஸ் , சாகோ அல்லது சிலியன் ஆமை; சில சமயங்களில் செலோனாய்டிஸ் என்னும் வேறொரு மரபுப் பிரிவின் கீழ் பட்டியலிடப்படுகிறது.
  • ஜியோசெலோன் டென்டிகுலாடா , மஞ்சள்-பாத ஆமை; சில சமயங்களில் செலோனாய்டிஸ் என்னும் வேறொரு மரபுப் பிரிவின் கீழ் பட்டியலிடப்படுகிறது.
  • ஜியோசெலோன் எலிகன்ஸ் , இந்திய நட்சத்திர ஆமை
  • ஜியோசெலோன் நிக்ரா , காலாபாகோஸ் இராட்சத ஆமை; சில சமயங்களில் செலோனாய்டிஸ் என்னும் வேறொரு மரபுப் பிரிவின் கீழ் பட்டியலிடப்படுகிறது.
  • ஜியோசெலோன் பார்டாலிஸ் , சிறுத்தை ஆமை; சில சமயங்களில் ஸ்டிக்மோசெலிஸ் அல்லது ஸாம்மோபேட்ஸ் என்னும் வேறொரு மரபுப் பிரிவுகளின் கீழ் பட்டியலிடப்படுகிறது.
  • ஜியோசெலோன் ப்ளாட்டினோடா , பர்மிய நட்சத்திர ஆமை
  • ஜியோசெலோன் ரேடியாடா , ஒளிக்கதிர் ஆமை; சில சமயங்களில் அஸ்ட்ரோகெலிஸ் என்னும் வேறொரு மரபுப் பிரிவின் கீழ் பட்டியலிடப்படுகிறது.
  • ஜியோசெலோன் ஸல்காடா , ஆப்பிரிக்க குதிமுள் ஆமை (ஸல்காடா ஆமை)
  • ஜியோசெலோன் நிபோரா, முக்கோண வடிவ ஆமை, மடகாஸ்கரின் (கலப்பைக்கொழு) ஆமை; சில சமயங்களில் அஸ்ட்ரோகெலிஸ் என்னும் வேறொரு மரபுப் பிரிவின் கீழ் பட்டியலிடப்படுகிறது.
 • கோபெரஸ்
  • கோபெரஸ் அகாசிஜி , பாலைவன ஆமை
  • கோபெரஸ் பெர்லாண்டியெரி , டெக்ஸாஸ் ஆமை
  • கோபெரஸ் ப்ளேவோமார்ஜினேடஸ் , பால்ஸன் ஆமை
  • கோபெரஸ் பாலிஃபெமஸ், வளை தோண்டும் ஆமை
 • ஹாட்ரியானஸ்
  • ஹாட்ரியானஸ் கார்சோனி (சின். ஹெச். ஆக்டோனேரியஸ்)
  • ஹாட்ரியானஸ் ரோபஸ்டஸ்
  • ஹாட்ரியானஸ் சுசெர்டி
  • ஹாட்ரியானஸ் உடாஹென்ஸிஸ்
 • ஹோமோபஸ்
  • ஹோமோபஸ் ஏரோலடஸ் , கிளி-மூக்கு நிலமுனை ஆமை
  • ஹோமோபஸ் புலெங்கெரி , புலெங்கரின் நிலமுனை ஆமை
  • ஹோமோபஸ் ஃபெமோராலிஸ் , காரு நிலமுனை ஆமை
  • ஹோமோபஸ் ஸிக்னேடஸ் , புள்ளியிட்ட நிலமுனை ஆமை, புள்ளியிட்ட பட்லோபர் ஆமை
  • ஹோமோபஸ் பெர்கெரி , பெர்கெரின் நிலமுனை ஆமை, நாமா பட்லோபர், மற்றொரு சொல் ஹோமோபஸ் ஸோலஸ்
 • இண்டோடெஸ்டுடோ
  • இண்டோடெஸ்டுடோ எலாங்கேடா , நீளமான ஆமை
  • இண்டோடெஸ்டுடோ ஃபார்ஸ்டெனி , திருவனந்தபுர ஆமை, ஃபார்ஸ்டென்னின் ஆமை
  • இண்டோடெஸ்டுடோ ட்ரேவெங்கோரிகா , திருவனந்தபுர ஆமை
 • கினிக்ஸிஸ்
  • கினிக்ஸிஸ் பெல்லியானா , 'பெல்'லினுடைய கீல் முதுகு ஆமை
  • கினிக்ஸிஸ் எரோஸா, இரம்பப்பல் கீல் முதுகுஆமை
  • கினிக்ஸிஸ் ஹோமியானா, ஹோமின் கீல் முதுகு ஆமை
  • கினிக்ஸிஸ் லோபாட்ஸியானா , லோபாட்ஸின் கீல் முதுகு ஆமை
  • கினிக்ஸிஸ் நாடாலென்ஸிஸ், நாடலின் கீல் முதுகு ஆமை
  • கினிக்ஸிஸ் ஸ்பெகி , ஸ்பெக்கின் கீல் முதுகு ஆமை
 • மலாகோகெர்ஸஸ்
  • மலாகோகெர்ஸஸ் டார்னியெரி , தட்டை ஒட்டு ஆமை
 • மனௌரியா
  • மனௌரியா எமிஸ் , காவி நிற ஆமை (மலை ஆமை)
  • மனௌரியா இம்ப்ரெஸ்ஸா, குறியீட்டு ஆமை
 • ஸாம்மோபேட்ஸ்
  • ஸாம்மோபேட்ஸ் ஜியோமெட்ரிக்கஸ் , வடிவியல் ஆமை
  • ஸாம்மோபேட்ஸ் ஆகுலிஃபர் , இரம்பப்பல் நட்சத்திர ஆமை
  • ஸாம்மோபேட்ஸ் டென்டோரியஸ் , ஆப்பிரிக்கக் கூடார ஆமை
 • பிக்ஸிஸ்
  • பிக்ஸிஸ் அராக்னாய்ட்ஸ் , மடகாஸ்கரின் சிலந்தி ஆமை
  • பிக்ஸிஸ் ப்ளானிகௌடா , மடகாஸ்கரின் தட்டை-வால் ஆமை
 • ஸ்டைலெமிஸ் (அழிந்து விட்ட இனம்)
  • ஸ்டைலெமிஸ் போட்டி
  • ஸ்டைலெமிஸ் காலாவெரென்ஸிஸ்
  • ஸ்டைலெமிஸ் கானெடோடியானா
  • ஸ்டைலெமிஸ் காபாக்ஸ்
  • ஸ்டைலெமிஸ் கான்ஸ்பெக்டா
  • ஸ்டைலெமிஸ் கோபெய்
  • ஸ்டைலெமிஸ் எமிலே
  • ஸ்டைலெமிஸ் ஃப்ரிஸாகியானா
  • ஸ்டைலெமிஸ் காராகோலென்ஸிஸ்
  • ஸ்டைலெமிஸ் நெப்ராஸென்ஸிஸ் (சின். எஸ். ஆம்ஃபிதோராக்ஸ் )
  • ஸ்டைலெமிஸ் நெக்ளெக்டஸ்
  • ஸ்டைலெமிஸ் ஆரெகோனென்ஸிஸ்
  • ஸ்டைலெமிஸ் பிக்மீ
  • ஸ்டைலெமிஸ் உயின்டென்ஸிஸ்
  • ஸ்டைலெமிஸ் அண்டாப்யுனா
 • டெஸ்டுடோ
  • டெஸ்டுடோ அட்லாஸ், அட்லாஸ் ஆமை, கோலோஸோசெலிஸ் (அழிந்து விட்டது)
  • டெஸ்டுடோ கிரேக்கா, கிரேக்க ஆமை (குதிமுள்-தொடை ஆமை)
  • டெஸ்டுடோ ஹெர்மான்னி, ஹெர்மனின் ஆமை
  • டெஸ்டுடோ ஹார்ஸ்ஃபியெல்டி, ரஷ்ய ஆமை (ஹார்ஸ்ஃபியெல்டின் ஆமை, அல்லது மத்திய ஆசிய ஆமை)
  • டெஸ்டுடோ க்ளெய்மான்னி, எகிப்திய ஆமை, நெகெவ் ஆமையையும் சேர்த்து
  • டெஸ்டுடோ மார்ஜினாடா, கோடிட்ட ஆமை
  • டெஸ்டுடோ நாப்யுலென்ஸிஸ் , ட்யுனிஸியாவின் குதிமுள்-தொடை ஆமை

மதத்தில் உருவகம்[தொகு]

கம்போடியாவின் அங்கோர் வாட் கோயிலில் உள்ள தட்டை வடிவ வேலைப்பாட்டு கொண்ட ஒரு சிற்பம் பெருங்கடலைக் கடைந்த-விஷ்ணு நடுவிலும், அவரது ஆமை அவதாரமான கூர்மாவதாரம் கீழாகவும், அசுரர்களும் தேவர்களும் இட-வலமாகவும் இருப்பது போலச் சித்தரிக்கிறது.

இந்து மதத்தில், கூர்மா (சமக்கிருதம்: कुर्म) என்பது விஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாகும். இது சத்ய யுகத்தை சார்ந்த மச்ச அவதாரத்தைப் போன்றதாகும். கீழ்ப்பாகத்தினை ஆமை வடிவாகக் கொண்ட, பாதி-மனிதன் பாதி-ஆமை என்னும் உருவினை, விஷ்ணு எடுத்துக்கொண்டார். பொதுவாக, அவர் நான்கு கரங்கள் உடையவராகச் சித்தரிக்கப்படுகிறார். பெரும் வெள்ளத்திற்குப் பின்னர் அவர் பெருங்கடலின் அடிப்பாகத்தில் அமர்ந்து கொண்டார். கடலைக் கடைந்து வேத காலத்தவரின் பண்டைய பொக்கிஷங்களை அடைவதற்காக, அவரது முதுகின் மேல் மற்ற தேவர்கள் ஒரு மலையை வைத்தனர். ஆமை ஓடுகளைப் பண்டைய சீனர்கள் பின்னர் வருவதை முன்னரே உரைக்கும் குறியீட்டு எலும்புகளாகப் பயன்படுத்தினர்.

கலாச்சார வருணனைகள்[தொகு]


காட்சிக்கூடம்[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

 1. http://www..bartleby.com/61/1/TO120100.html
 2. Andy Highfield. "Tortoise Trust Egg F.A.Q". Tortoisetrust.org. பார்த்த நாள் 2009-04-07.
 3. Andy Highfield. "Tortoise egg incubation". Tortoisetrust.org. பார்த்த நாள் 2009-04-07.
 4. "Tortoise Believed to Have Been Owned by Darwin Dies at 176 - Science News | Science & Technology | Technology News". FOXNews.com (2006-06-26). பார்த்த நாள் 2009-04-07.
 5. ஹனாகோ
 6. "World | South Asia | 'Clive of India's' tortoise dies". BBC News. 2006-03-23. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4837988.stm. பார்த்த நாள்: 2009-04-07. 
 7. 2008வது வருடம் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, டெய்லி மெயில் பத்திரிகையில் போயர் போரின் புகைப்படத்தில் இடம் பெற்ற 176 வயதான ஜோனா என்னும் ஆமையே உலகின் முதிய ஆமையாக அறியப்பட்டது
 8. போயர் போரின் நினைவுக் குறிப்புகள் ஜோனாதான் ஆமையின் வயதை நிர்ணயிக்க உதவின.. தி டைம்ஸ், டிசம்பர் 4, 2008
 9. 2003 க்ரோலியர் கலைக்களஞ்சியம், தி கிரேட் புக் ஆஃப் நாலெட்ஜ், தி ஸ்பீட் ஆஃப் அனிமல்ஸ், பிபி. 278
 10. http://eobatagur.ifrance.com/pub/claudetong1.pdf

புற இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆமை&oldid=2200177" இருந்து மீள்விக்கப்பட்டது