தோணியாமை
Green sea turtle | |
---|---|
![]() | |
Chelonia mydas swimming above Hawaiian coral reef. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | ஊர்வன |
பேரினம்: | Chelonia |
இனம்: | mydas |
துணையினம் | |
| |
வேறு பெயர்கள் [2] | |
|
தோணியாமை[சான்று தேவை] (green sea turtle): கடலாமையின் ஒரு வகையான இதன் அறிவியல் பெயர் Chelonia mydas ஆகும். இவ்வகை ஆமைகள் ஒன்றரை மீட்டர் நீளம் கொண்டவை. 150 கிலோவுக்கும் அதிகமான எடையுடன் இருக்கும். இவற்றின் மேல் ஓடு அடர்ந்த பச்சை நிறம் கொண்டது.[3] பாசிகளுக்கிடையே வளர்வதால்தான் இவை இந்த நிறத்தில் இருக்கின்றன. கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும், அந்தமான் கடற்பகுதிகளிலும் காணப்படுகின்றன.எப்போதாவது முட்டையிடுவதற்காக குஜராத் கடற்கரைப் பகுதிகளுக்கு வரும். இவை ஒரு தடவையில் 104 முட்டைகள்வரை இடும். இவை விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுவதால் சில பகுதி மக்கள் இவற்றை வழிபடுகிறார்கள். இவற்றின் எலும்புகளால் சமைக்கப்பட்ட சூப் மிகவும் புகழ் பெற்றது. இவை, முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வேட்டையாடப்படுகின்றன. பெரிய துடுப்புபோன்ற இவற்றின் கால்கள் மூடுகாலணிகள் தயாரிப்பதற்குப் பயன்படுகின்றன.
குறிப்புகள்[தொகு]
- "Chelonia mydas". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்த்த நாள் 21 February 2007.
- Seminoff (2004). Chelonia mydas. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 09 May 2006.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Green sea turtle, IUCN Red List
- ↑ Fritz Uwe; Peter Havaš (2007). "Checklist of Chelonians of the World". Vertebrate Zoology 57 (2): 165–167. ISSN 18640-5755. Archived from the original on 2010-12-17. http://www.webcitation.org/5v20ztMND. பார்த்த நாள்: 29 May 2012.
- ↑ http://www.fws.gov/northflorida/SeaTurtles/Turtle%20Factsheets/green-sea-turtle.htm
வெளியிணைப்புகள்[தொகு]
- Images and movies (Chelonia mydas)—ARKive
- US National Marine Fisheries Service green sea turtle page
- Floridian and Mexican populations—US Fish and Wildlife Service
- IUCN Red List entry
- Desktop wallpaper & fun green turtle facts
- Green Turtle video - Macaulay Library