எலும்பு மச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எலும்பு மச்சை
Gray72-en.svg
Illustration of cells in bone marrow
இலத்தீன் medulla ossium

எலும்பு மச்சை (Bone marrow) அல்லது என்பு மச்சை என்பது எலும்புகளின் உட்பகுதியில் காணப்படும் மென்மையான இழையமாகும். வளர்ந்தவர்களின் பெரிய எலும்புகளிலுள்ள எலும்பு மச்சை[1] குருதிக் கலங்களை (செல்களை, கண்ணறைகளை) உற்பத்தி செய்கிறது. என்பு மச்சையில் சிவப்பு என்பு மச்சை, மஞ்சள் என்பு மச்சை என இருவகைகள் உண்டு. சிவப்பு என்பு மச்சையிலிருந்து குருதிச் சிவப்பணுக்கள், குருதி வெள்ளை அணுக்கள் மற்றும் குருதிச் சிறுதட்டுக்கள் உற்பத்தியாகின்றன. சில வெள்ளை அணுக்கள் மஞ்சள் என்பு மச்சையிலிருந்து உருவாகின்றன. மஞ்சள் என்பு மச்சையின் நிறத்துக்குக் காரணம் கொழுப்புக் கலங்கள் அதிகம் உள்ளமை ஆகும். பிறக்கும் போது எல்லா எலும்பு மச்சையும் சிவப்பு ஆகும். வளர்ந்தவர் ஒருவரில் சராசரியாக 2.6 கிலோகிராம் என்பு மச்சை இருக்கும். இதில் ஏறத்தாழ அரைப்பங்கு சிவப்பு என்பு மச்சையாகும்.

சில வகையான குருதிப் புற்றுநோயால் தாக்குண்டவர்கள் தாங்கள் உயிர்பிழைக்க, சில குறிப்பிட்ட இணக்கம் உடைய எலும்பு மச்சையைப் பிறரிடம் இருந்து பெற்று உள் செலுத்தினால் புற்றுநோய் உற்றவர்கள் முற்றிலும் குணம் அடையக்கூடும். இது சில வகையான புற்றுநோய்க்குத் தீர்வுதரும் ஒரு நல்ல வழி. இதற்காக என்பு மச்சை கொடைக்காக பதிவகங்கள் உலகில் பல நாடுகளில் உள்ளன[2][3][4]

குறிப்புகள்[தொகு]

  1. மச்சை என்பதைத் தமிழில் என்பு ஊன், சூப்பி, வெண்ணஞ்சு, உட்கூழ், உட்சுரம் என்றும் வழங்குவர்.
  2. கனடிய குருதி சேவையகத்தின் என்பு மச்சைப் பிரிவு
  3. அமெரிக்க என்பு மச்சைக் கொடைப் பதிவகம்
  4. நேஷனல் மாரோ 'டோனர் புரோகிராம் என்னும் நிறுவனத்தின் என்பு மச்சைச் சேவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலும்பு_மச்சை&oldid=2224271" இருந்து மீள்விக்கப்பட்டது