பசியின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பசியின்மை (Loss of appetit) இரண்டு வகைப்படும். ஒன்று உணவு உண்ட பின் ஏற்படும் பசியின்மை. இது வழக்கமான ஒன்றுதான். ஆனால் உணவு உண்பதற்கு முன்பே பசியின்மை anorexia ஏற்பட்டால் அது ஒரு நோயாகவோ அல்லது நோயின் அறிகுறி(symptom)யாகவோ இருக்கலாம்.

உணவுக்குழாயில் உள்ள சுருக்கித் தசைகள் உணவை வயிற்றுக்கு உள்ளே அனுப்புவதற்குப் பெரிதும் துணைபுரிகின்றன. அதீத மகிழ்ச்சி, மன வருத்தம், பயம் அல்லது இது போன்ற பல பல உளவியல் காரணங்களால் இந்த சுருக்கித் தசை வேலை செய்வதை நிறுத்தி விடுகிறது. இதற்கு எதிராக சரியான மருத்துவ நடவடிக்கைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில நோய்களின் அறிகுறியாகக்கூட இந்தப் பசியின்மை இருக்கலாம். சில நோய்கள் வந்ததால் கூட பசியின்மை ஏற்படலாம்.

காரணங்கள்[தொகு]

 • மகிழ்ச்சி
 • இன்பம்
 • ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பு
 • ஆர்வத்துடன் செய்யக்கூடிய பணிகள்
 • ஆழ்ந்த சிந்தனை
 • தூக்கமின்மை

இது போன்ற காரணங்களால் ஏற்படும் பசியின்மை சில மணி நேரங்களில் தானாகவே சரியாகிவிடும்; இதனால் உடல் களைப்பு போன்ற இன்னல்கள் ஏற்படாது.

உடனடியாக மருத்துவ நடவடிக்கைகள் தேவைப்படும் காரணங்களில் சில:[தொகு]

 • மஞ்சள் காமாலை
 • புற்று நோய்
 • காய்ச்சல்
 • அதீத பயம்
 • கவலை

இது போன்ற காரணங்களால் பசியின்மை ஏற்பட்டால், அது சில மணி நேரங்களில் தானாகச் சரியாகாது என்பதுடன் மிகுந்த உடல் சோர்வும், களைப்பும் ஏற்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசியின்மை&oldid=2744558" இருந்து மீள்விக்கப்பட்டது