பழக்க அடிமைத்தனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பழக்க அடிமைத்தனம் (addiction) என்பது ஏதாவது ஒரு பழக்கம் தொடர்பில் அளவுக்கு அதிகமான ஈடுபாடு கொண்டிருத்தலைக் குறிக்கும். பல சமயங்களில் உடலளவிலும், உள்ளத்தளவிலும் இத்தகைய பழக்கங்களில் தங்கியிருத்தலையும் இது குறிக்கும். போதைப்பொருள் பாவனை, மதுபானம்அருந்துதல், சூதாட்டம், புகைத்தல் அல்லது புகையிலை பிடித்தல் போன்றவற்றில் ஏற்படக்கூடிய பழக்கங்கள் இத்தகையவை ஆகும்.

மருத்துவத்தில் பழக்க அடிமைத்தனம் என்பது, உடலின் சாதாரண தொழிற்பாடுகளுக்கு, போதை மருந்து போன்ற ஏதாவது ஒரு பொருளில் தங்கியிருக்கும் நிலையைக் குறிக்கிறது. இப்பொருள் திடீரென மறுக்கப்படும்போது உடலில் சில தனித்தன்மையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பொருட்களைத் தவறாகப் பயன்படுத்தி உட்கொள்ளுவதனால் மட்டுமன்றி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளுவதனாலும் இந்நிலை ஏற்படலாம். மருந்துகள் மற்றும் உட்கொள்ளும் பொருட்கள் தொடர்பில் மட்டுமன்றி அளவு மீறிய கணினிப் பழக்கம் முதலியனவும் பழக்க அடிமைத்தனத்தை உண்டாக்கக் கூடும். இத்தகையவை ஒருவருடைய உடல்நலம், உளநலம், சமூக வாழ்க்கை போன்றவற்றைப் பாதிப்பதுடன், வேறும் தீய விளைவுகளை உண்டாக்கினாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் ஒரு குறிப்பிட்ட செயலைத் தொடர்ச்சியாகச் செய்வதில் ஈடுபட்டிருக்கும் நிலையைக் குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழக்க_அடிமைத்தனம்&oldid=1352085" இருந்து மீள்விக்கப்பட்டது