உள்ளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடலும் உள்ளமும் சேர்ந்தே மனிதர் எனப்படுகிறார்கள். மூளை, கண்கள், கைகள், கால்கள், தேகம் என உறுப்புகளை உடல் கொண்டுள்ளது. அறிவு, உணர்ச்சி, நினைவு, மனத்திடம், கற்பனை, சிந்தனை போன்ற நேரடியான பொருள்களால் பிரதிநிதிப்படுத்தப்பட்டாத கூறுகளாலானது உள்ளம். உள்ளத்தை தமிழில் மனம் என்றும் சிந்தை என்றும் குறிப்பர்.

உள்ளம் உள்ளுணர்வையே பெரிதும் சுட்டுகிறது. அதாவது உள்ளுணர்வு அறிவு, நினைவு, உணர்ச்சி, மனத்திடம், கற்பனை, சிந்தனை ஆகியவற்றின் கூட்டாக வெளிப்படுகிறது.

தற்கால அறிவியலின்படி மூளையே உள்ளத்துடன் இறுகிய தொடர்புடைய உறுப்பு ஆகும். மூளையின் தொழிற்பாட்டின் விளைவே உள்ளம் அல்லது உள்ளுணர்வு என்ற கருத்தும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளம்&oldid=3417070" இலிருந்து மீள்விக்கப்பட்டது