தற்காப்புக் கலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தற்காப்புக் கலைகள் அல்லது சண்டைக் கலைகள் (Martial arts) என்பது சண்டைக்காகப் பயிற்சி பெறுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட மரபுகளையும் செயல்முறைகளையும் குறிக்கும். பல காரணங்களுக்காக இவற்றில் பயிற்சி பெறக்கூடும் ஆயினும், இவை அனைத்தினதும் இலக்கு ஒன்றே. இந்த இலக்கு, ஒருவர் அல்லது பலரை உடல்ரீதியாகத் தோற்கடிப்பது அல்லது தனக்கோ பிறருக்கோ ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பயமுறுத்தல்களுக்கு எதிராகக் அவர்களைக் காத்துக்கொள்வது ஆகும். இவற்றைவிடச் சில தற்காப்புக் கலைகள், ஆன்மீகம், மதம் ஆகிய நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இந்து மதம், பௌத்தம், தாவோயியம், கன்பூசியனியம், சின்டோ போன்ற மதங்களில் இத்தகைய தொடர்புகள் உண்டு. சில தற்காப்புக் கலைகளின் வடிவங்கள் அவற்றுக்கெனவே உள்ள ஆன்மீகம் சார்ந்த அல்லது ஆன்மீகம் சாராத நெறிமுறைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. பல தற்காப்புக் கலைகள் தற்காப்பு விளையாட்டு ஆகவும் பயிலப்படுவது உண்டு. வேறு சில ஒரு நடன வடிவம் போலவும் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. தற்காப்புக் கலையில் ஈடுபடுபவர் தற்காப்புக் கலைஞர் எனப்படுவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தற்காப்புக்_கலைகள்&oldid=2227988" இருந்து மீள்விக்கப்பட்டது