கராத்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கராத்தே
(空手)
Karatedo.svg
Hanashiro Chomo.jpg
ஹனாஷிரோ சோமோ
வேறு பெயர் கராத்தே-டூ (空手道)
நோக்கம் தாக்குதல்
கடினத்தன்மை முழுமையான தொடுகை
தோன்றிய நாடு சப்பானின் கொடி ஜப்பான் (ரியூக்யுத் தீவுகளுக்கு உரிய சண்டை முறை, சீனக் கென்போ சண்டை முறை என்பவற்றில் இருந்து உருவானது.[1][2] ஜப்பானில் மேலும் மேம்படுத்தப்பட்டது)
உருவாக்கியவர் காங்கா சக்குக்காவா; சோக்கோன் மட்சுமூரா; ஆங்கோ இட்டோசு; கிச்சின் ஃபுனாக்கோஷி
Parenthood சீனச் சண்டைக்கலை, ரியூக்யுத் தீவுகளின் சண்டைக்கலைகளான நாகா-டே, ஷூரி-டே, தேமாரி-டே என்பவை.
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை

கராத்தே என்பது, சண்டைக்குரிய அல்லது தற்காப்புக்கான ஒரு கலையாகும். இது ஜப்பானியத் தீவுக் கூட்டங்களில் ஒன்றான ரியூக்யுத் தீவுக்கு உரிய சண்டை முறைகளும், சீனாவின் கென்போ என்னும் சண்டை முறையும் கலந்து உருவானது. முதன்மையாக இது ஒரு தாக்குதல் கலையாகும். குத்துதல், உதைத்தல், முழங்கால் மற்றும் முழங்கைத் தாக்குதல்கள், திறந்த கை உத்திகள் என்பன இக் கலையில் பயன்படுகின்றன. இறுகப் பிடித்தல், பூட்டுப் போடுதல், கட்டுப்படுத்துதல், எறிதல், முக்கியமான இடங்களில் தாக்குதல் என்பனவும் சில கராத்தேப் பாணிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

ச்சின் என்னும் வகுப்பைச் சேர்ந்தோரிடையே இது தோன்றிய இது "டி" ("ti") அல்லது "டெ" ("te") என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. 1372ல், சுசான் மன்னர் சாட்டோவினால், மிங் வம்சத்துச் சீனாவுடன் வணிகத் தொடர்புகள் உருவாக்கப்பட்டபோது, சீனாவிலிருந்து வந்தவர்கள் மூலம் பலவகையான சீனத்துச் சண்டைக் கலைகள் ரியூக்யுத் தீவுகளுக்கு அறிமுகமானது. சிறப்பாக இவை சீனாவின் ஃபுஜியன் மாகாணத்திலிருந்தே வந்தன. 1392 ஆம் ஆண்டில், 36 சீனக் குடும்பங்கள், பண்பாட்டுப் பரிமாற்றம், சீனச் சண்டைக் கலை பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்ளல் போன்ற காரணங்களுக்காக ஒக்கினாவாவுக்கு வந்தனர். 1429ல் ஷோகினாவா மன்னர் காலத்தில் ஒக்கினாவாவில் ஏற்பட்ட அரசியல் மையப்படுத்தல், 1609 ஆம் ஆண்டில், ஒக்கினாவா ஷிம்சு இனக்குழுவினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் ஆயுதங்கள் தடை செய்யப்பட்டமை போன்ற நிகழ்வுகளும் ஆயுதங்கள் இல்லாத சண்டை முறைகள் வளர்ச்சியடைவதற்குக் காரணமாயின.

மேற்கோள்கள்[தொகு]

  1. Higaonna, Morio (1985). Traditional Karatedo Vol. 1 Fundamental Techniques. p. 17. ISBN 0-87040-595-0. 
  2. History of Okinawan Karate
"https://ta.wikipedia.org/w/index.php?title=கராத்தே&oldid=1828281" இருந்து மீள்விக்கப்பட்டது