தாவோயியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யின்-யாங் சின்னம்

டாவோயிசம் அல்லது தாவோயிசம் ஒரு சீன சமய தத்துவக் கோட்பாடு. இது பல வகையான மெய்யியல், சமயம் ஆகியவை சார்ந்த மரபுகளையும், கருத்துருக்களையும் உள்ளடக்குகிறது. இம் மரபுகள் கிழக்காசியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. இவற்றுட் சில உலக அளவிலும் பரவியுள்ளன. "டோ" என்றால் வழி என்று பொருள்படும். அண்டம் இயல்பாக ஒரு "டோ" அல்லது வழியைக் கொண்டிருக்கின்றது. மனிதன் அந்த வழியை அறிந்து ஒத்துப்போகும் பொழுது அவன் முழுமை அல்லது திருப்தி அடைகின்றான் என்று தாவோயிசம் போதிக்கிறது. டாவோயிச நெறிமுறைகள் மும்மணிகள் பற்றிக் குறிப்பிடுகின்றன. இவை, கருணை, அடக்கம், பணிவு என்பனவாகும். தாவோயிசச் சிந்தனைகள் நலம், நீண்ட வாழ்நாள், இறவாமை, இயல்புச் செயற்பாடு, தற்றூண்டல் (spontaneity) போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது.

மக்கள் மட்டத்திலான தாவோயிசத்தில் இயற்கை வணக்கம், முன்னோரின் ஆவிகளை வணங்குதல் என்பன பொதுவாகக் காணப்படுகின்றன. முறைப்படுத்திய தாவோயிசம், அதன் சடங்கு முறைகளையும், நாட்டுப்புறச் சமயத்தையும் வேறுபடுத்திக் காண்கிறது. சீன இரசவாதம், சோதிடம், சமையல், பலவகைச் சீனப் போர்க்கலைகள், சீன மரபுவழி மருத்துவம், பெங்சுயி, "சிகொங்" எனப்படும் மூச்சுப் பயிற்சி போன்றவை தாவோயிசத்துடன் பின்னிப் பிணைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவோயியம்&oldid=2289451" இருந்து மீள்விக்கப்பட்டது