உள்ளடக்கத்துக்குச் செல்

சோதிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோதிடம்
மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்
விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம்
சோதிடம் உள்ளடக்க வகைகள்
——————
குறிப்புதவிக்கு
பட்டியலை விரிவுபடுத்தவும்

——————
விரைவு இணைப்பு: கிளைகள்
சீன முறைமருத்துவ சோதிடம்கிளி சோதிடம்நிதியியல் சோதிடம்இடவமைப்பு சோதிடம்

சோதிடம் (Astrology) என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஆகும். உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் இதனை நம்புகின்றார்கள். சோதிடத்துக்கு எந்தவிதமான அறிவியல் அடிப்படையும் இல்லை.

கோள்களும், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும்.

சொல்லிலக்கணம்

[தொகு]

சோதிடம் என்ற வார்த்தையான ἀστρολογία என்ற கிரேக்கப் பெயர்ச் சொல்லிருந்து பிறந்ததாகும். இதற்குக் கிரேக்க மொழியில் நட்சத்திரங்களின் கணக்கு என்று பொருளாகும். இச்சொல்லானது நட்சத்திரக் கணிப்பு என்றாக மாற்றமடைந்தது.

மேற்கத்திய சோதிடம்

[தொகு]

மேற்கத்திய சோதிடம் தாலமி கோட்பாடுகளின் அடிப்படையிலும், ஹெலினிஸ்டிக் மற்றும் பாபிலோனிய மரபுகளின் அடிப்படையிலும் உருவானவையாகும். இதில் பன்னிரு ராசிகளும், நட்சத்திரங்களும் அடங்கிய ராசிச்சக்கரம் சோதிடக் கணிப்புமுறைக்குப் பயன்படுகிறது.

ஆசிய சோதிடம்

[தொகு]

சோதிடம் என்பது ஒரு மனிதனின் நன்மை, தீமை, சாதகம், பாதகம் ஆகியவற்றை சோதித்து அறியக்கூடிய இடம் இராசி கட்டம் (சோதிக்கும் + இடம் = சோதிடம்) என்பதால் அத்தகைய கலை 'சோதிடம்' என்று அழைக்கப்பட்டது. இந்தக் கலையை பிற்கால சமஸ்கிருத நூல் ஆசிரியர்கள் மொழிபெயர்க்கும் போது சோதிடம் என்பது ஜோதிடம்--ஜோசியம்--ஜோஷ்யம்--ஜ்யோடிஸ் ( jyótis ) என்று மருவியது. இந்திய சோதிடம் பொதுவாக வேத சோதிடம் என்றும் அறியப்பெறுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தினைக் கொண்டு அந்நேரத்தில் நவக்கிரகங்களின் நிலையைக் கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவக்கிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், இலக்கணமும் குறிக்கப்பெறுகின்றன.

இந்துக் காலக் கணிப்புமுறையால் உருவான பஞ்சாங்கம் என்ற கால அட்டவணை கொண்டு ஜாதகத்தின் பலன்கள் கணிக்கப்பெறுகின்றன. பஞ்சாங்கம் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.

ஜோதிடம், வேதத்தின் ஐந்தாம் வேதாங்கமாகக் கருதப்படுகிறது. இது வேதங்களின் கண்களாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட கோள்கள் எப்போது எந்த அமைப்பில் இருக்கும் என்பதைக் கணிக்கவும் எப்போது, எவ்வாறு வைதீக கர்மாக்கள் செய்ய வேண்டும் என்பதற்கு நெறிமுறைகள் உள்ளது. மிகத் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலையைக் கணிக்கக் கணிதம் தெரிந்து வைத்திருப்பது கட்டாயாமாகும். கணித அடிப்படையில் ஜோதிடம் மூன்று ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது. சித்தாந்த ஸ்கந்தம், சம்ஹித ஸ்கந்தம். ஹோர ஸ்கந்தம். இவற்றில் சித்தாந்த ஸ்கந்தம் அல்ஜீப்ரா, ட்ரிகோணமெட்ரி, ஜியோமெட்ரி, கூட்டல் கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது. சம்ஹித ஸ்கந்தம், வானவியல் மற்றும் ஜோதிடம் முதலான துறைகளைப் பேசுகிறது. ஹோர ஸ்கந்தம் கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.

இந்து சமயத்தின் இதிகாசமான மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் காலக்கணிப்பு முறையில் சிறந்தவர். இவர் குறித்துத் தந்த நாளில் குருச்சேத்திரப் போரைத் தொடங்கினால் வெல்ல இயலும் என எதிரான கௌரவர்களே இவரிடம் நாள் குறித்துச் சென்றதாக மகாபாரதம் கூறுகிறது.

கிழக்காசிய சோதிடம்

[தொகு]

சீன ஜோதிடம் பாரம்பரிய வானியல் மற்றும் நாள்காட்டி அடிப்படையாகக் கொண்டது. சீன ஜோதிடம் சீன தத்துவத்துடன் (மூன்று நல்லிணக்கம்: சொர்க்கம், பூமி, நீர் கோட்பாடு) நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. சீன சோதிடம் அடிப்படையில் 10 தேவலோக தண்டுகளையும், 12 துருவக் கிளைகளையும் கொண்ட தேவ மரமாக உருவகப்படுத்தப்பட்டது. பின்பு இதைக் கணிப்பதில் இருந்த கடினத் தன்மையை முன்னிட்டு, 12 கிளைகளுக்குப் பதில் 12 விலங்குச் சின்னங்களைக் கொண்டு குறிப்பிடப்பட்டது. 10 தண்டுகள் என்பன யின்-யான் முறையில் பிரிக்கப்பட்ட ஐந்து மூலகங்கள் ஆகும். ஆக மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன சோதிடம் கணிக்கப்படுகிறது.

சோதிடமும் வான்குறியியலும் (astrology)

[தொகு]
சோகி மற்றும் கை ரேகை பார்த்து குறி சொல்லுதல்
தமிழகக் கிராம மக்களிடம் கிளி சோதிடம் பார்க்கும் பழக்கமுள்ளது.

கோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தைக் காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன. அக்கோள்கள் பின்வருமாறு:

  1. சூரியன் (ஞாயிறு / Sun)
  2. சந்திரன் (திங்கள் / Moon)
  3. செவ்வாய் (Mars)
  4. புதன் (அறிவன் / Mercury)
  5. குரு (வியாழன் / Jupiter)
  6. சுக்ரன் (வெள்ளி / Venus)
  7. சனி (காரி / Saturn)
  8. இராகு (நிழற்கோள்)
  9. கேது (நிழற்கோள்)

கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்குப் புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாறு:

  1. மேழம் (மேஷம்)
  2. விடை (ரிஷபம்)
  3. ஆடவை (மிதுனம்)
  4. கடகம்
  5. மடங்கல் (சிம்மம்)
  6. கன்னி
  7. துலை (துலாம்)
  8. நளி (விருச்சிகம்)
  9. தனுசு
  10. சுறவம் (மகரம்)
  11. குடம் (கும்பம்)
  12. மீனம்

இந்து அல்லது இந்திய முறைப்படி பன்னிரண்டு இராசிகள் பின்வருமாறு:

எண் தமிழில் / சமஸ்கிருத ராசி ராசி அதிபதி (கிரகம்) தமிழ் மாதம் தமிழ் மாதம் (ஆங்கிலம்) இராசிக்கான சந்திர மாதம் (சமஸ்கிருதம்) உருவகம் சமஸ்கிருத மாதம் / ராசி ஆங்கில ராசி இந்திய / வேத முறை / (விண்மீன் ஆண்டு) Sidereal மேற்கத்திய சோதிடம் / (வெப்பமண்டல ஆண்டு) / Tropical
1 மேழம் (மேஷம்) செவ்வாய் சித்திரை Chithirai சைத்ர ஆடு Meṣa (मेष) Aries ஏப் 14 –
மே 14
மா 21 –
ஏப் 19
2 விடை (ரிஷபம்) சுக்கிரன் வைகாசி Vaikasi வைசாக எருது Vṛṣabha (वृषभ) Taurus மே 15 –
ஜூன் 14
ஏப் 20 –
மே 20
3 ஆடவை (மிதுனம்) புதன் ஆனி Aani ஜ்யேஷ்ட இரட்டையர் Mithuna (मिथुन) Gemini ஜூன் 15 –
ஜூலை 16
மே 21 –
ஜூன் 20
4 கடகம் சந்திரன் ஆடி Aadi ஆஷாட நண்டு Karkaṭa (कर्क) Cancer ஜூலை 17 -
ஆக 16
ஜூன் 21 -
ஜூலை 22
5 சிங்கம் / மடங்கல் (சிம்மம்) சூரியன் ஆவணி Avani ஷ்ராவண சிங்கம் Simha (सिंह) Leo ஆக 17 –
செப் 16
ஜூலை 23 –
ஆக 22
6 கன்னி புதன் புரட்டாதி Purattasi பத்ரபாத திருமணமாகாத பெண் Kanya (कन्या) Virgo செப் 17 –
அக் 17
ஆக 23 –
செப் 22
7 துலை (துலாம்) சுக்கிரன் ஐப்பசி Aippasi அஸ்வின தராசு Tulā (तुला) Libra அக் 18 –
நவ 16
செப் 23 –
அக் 22
8 நளி (விருச்சிகம்) செவ்வாய் கார்த்திகை Karthikai கார்திக தேள் Vṛścika (वृश्चिक) Scorpio நவ 17 –
டிச 15
அக் 23 –
நவ 21
9 தனுசு குரு மார்கழி Margazhi மார்கஷீர்ஷ வில் Dhanus (धनुष) Sagittarius டிச 16 –
ஜன 13
நவ 22 –
டிச 21
10 சுறவம் (மகரம்) சனி தை Thai பௌஷ மகரம் Makara (मकर) Capricorn ஜன 14 –
பிப் 12
டிச 22 –
ஜன 19
11 குடம் (கும்பம்) சனி மாசி Masi மக குடம் Kumbha (कुंभ) Aquarius பிப் 13 –
மா 13
ஜன 20 –
பிப் 18
12 மீனம் குரு பங்குனி Panguni பல்குண மீன் Meena (मीन) Pisces மா 14 –
ஏப் 13
பிப் 19 –
மா 20

சோதிடத்தில் விண்மீன் குழுக்கள்

[தொகு]

ஞாயிற்றின் தோற்றுப்பாதை (முழுவதுமாக 360 பாகை) 1313 பாகை இடைவெளியில் 27 விண்மீன் குழுக்களாக கூறு செய்யப்பட்டுள்ளது. 'அசுவினி' ஞாயிற்றின் தோற்றுப்பாதையில் முதற் கூறாகும், 'ரேவதி' கடைக்கூறாகும். இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன்குழுவில் அமைந்துள்ளது என்பதைக் கண்டறியலாம். ஒவ்வொரு விண்மீன் குழுவையும் மேலும் 313 பாகைகள் கொண்ட 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவு 'பாதம்' எனப்படும். ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் மீதுள்ள இராசி சக்கரமும் 30 பாகை இடைவெளியில் 12 இராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 'மேடம்' இராசி சக்கரத்தில் முதற் கூறாகும், 'மீனம்' கடைக்கூறாகும்.

இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்துப் பட்டியலிடலாம்:

விண்மீன் குழுஇராசிபாகை
அசுவினிமேடம்13°20'
பரணிமேடம்26°40'
கிருத்திகை பாதம் 1மேடம்30°
கிருத்திகை பாதம் 2,3,4
ரோகிணி பாதம் 1
இடபம்43°20'
ரோகிணி பாதம் 2,3,4
மிருகசீரிடம் பாதம் 1
இடபம்56°40'
மிருகசீரிடம் பாதம் 2இடபம்60°
மிருகசீரிடம் பாதம் 3,4
திருவாதிரை பாதம் 1,2
மிதுனம்73°20'
திருவாதிரை பாதம் 3,4
புனர்பூசம் 1,2
மிதுனம்86°40'
புனர்பூசம் பாதம் 3மிதுனம்90°
புனர்பூசம் பாதம் 4
பூசம் பாதம் 1,2,3
கடகம்103°20'
பூசம் பாதம் 4
ஆயில்யம் பாதம் 1,2,3
கடகம்116°40'
ஆயில்யம் பாதம் 4கடகம்120°
மகம்சிங்கம்133°20'
பூரம்சிங்கம்146°40'
உத்திரம் பாதம் 1சிங்கம்150°
உத்திரம் பாதம் 2,3,4
அட்டம் பாதம் 1
கன்னி163°20'
அட்டம் பாதம் 2,3,4
சித்திரை பாதம் 1
கன்னி176°40'
சித்திரை பாதம் 2கன்னி180°
சித்திரை பாதம் 3,4
சுவாதி பாதம் 1,2
துலாம்193°20'
சுவாதி பாதம் 3,4
விசாகம் பாதம் 1,2
துலாம்206°40'
விசாகம் பாதம் 3துலாம்210°
விசாகம் பாதம் 4
அனுடம் பாதம் 1,2,3
விருச்சிகம்223°20'
அனுடம் பாதம் 4
கேட்டை பாதம் 1,2,3
விருச்சிகம்236°40'
கேட்டை பாதம் 4விருச்சிகம்240°
மூலம்தனுசு253°20'
பூராடம்தனுசு266°40'
உத்திராடம் பாதம் 1தனுசு270°
உத்திராடம் பாதம் 2,3,4
திருவோணம் பாதம் 1
மகரம்283°20'
திருவோணம் பாதம் 2,3,4
அவிட்டம் பாதம் 1
மகரம்296°40'
அவிட்டம் பாதம் 2மகரம்300°
அவிட்டம் பாதம் 3,4
சதயம் பாதம் 1,2
கும்பம்313°20'
சதயம் பாதம் 3,4
பூரட்டாதி பாதம் 1,2
கும்பம்326°40'
பூரட்டாதி பாதம் 3கும்பம்330°
பூரட்டாதி பாதம் 4
உத்திரட்டாதி பாதம் 1,2,3
மீனம்343°20'
உத்திரட்டாதி பாதம் 4
ரேவதி பாதம் 1,2,3
மீனம்356°40'
ரேவதிமீனம்360°

சோதிடம் நோக்கிய விமர்சனங்கள்

[தொகு]

எந்த ஓர் அறிவியலும் அது எந்த அளவு விளக்கி வரவுரைக்குமென்பதைப் பொறுத்துத்தான் அதன் தரம் கணிக்கப்பட வேண்டும். ஒரு விடயம் பரிசோதனைக்கு உட்பட்டு நிறுவப்பட வேண்டும். சோதிடம் அறிவியல் அணுகுமுறைப்படி நிறுவப்பட முடியாது. காரணம் அதற்கு அறிவியல் அடிப்படை கிடையாது. எனவே சோதிடத்தை நம்புவது ஒரு வகை மூடநம்பிக்கைதான் என்பது ஒரு சாராரது கருத்து.

சூரியக் குடும்பத்திலுள்ள கோள்களைக் குறிப்பிடும் சோதிடம் யுரேனஸ், நெப்டியூன் பற்றிக் குறிப்பிடாதது. பூமியின் துணைக்கோளான சந்திரனைக் கோளாகக் குறிப்பிடுதல் போன்றவை வானியலுக்கு எதிரானதாகவும், ராகு, கேது போன்றவை கோள்களாகச் சோதிடத்தில் குறிப்பிடப்பட்டாலும், இவை சூரியக் குடும்பத்தில் இருள் கோள்களாகும்.[1]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதிடம்&oldid=4474048" இலிருந்து மீள்விக்கப்பட்டது