சகாதேவன்
Jump to navigation
Jump to search
சகாதேவன் மகாபாரதத்தில் வரும் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் நகுலனும் இரட்டையர்கள் ஆவர்.
பாண்டவர் ஐவரில் சகாதேவனே இளையவர் ஆவார். மேலும் அவர்களில் சகாதேவனே புத்திக்கூர்மை மிக்கவர். தன்னுடைய சகோதரன் நகுலனைப் போல் வாள் வீச்சில் சிறந்தவராக விளங்கினார்.
இவர் மகத நாட்டு மன்னனான ஜராசந்தனின் மகளை மணந்து கொண்டார்.
சகாதேவன், பாண்டவர்களின் தலைமறைவு வாழ்க்கையின் போது தந்திரிபாலன் என்ற மாற்றுப் பெயருடன் விராடமன்னனின் நூறாயிரம் பசுக்களை மேற்பார்வையிடுபவராக மாறுவேடம் தாங்கினார். போரின் போது சகுனியை வதம் செய்கிறார்[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ஸ்ரீ.மஹாபாரத ஸாரம்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், பக்கம்;633, 634
வெளி இணைப்பு[தொகு]
பஞ்ச பாண்டவர்கள் | |
---|---|
தருமன் | பீமன் | அருச்சுனன் | நகுலன் | சகாதேவன் |