கிரந்திகன்
Jump to navigation
Jump to search
கிரந்திகன், மகாபாரத இதிகாசத்தில் 12 ஆண்டுகள் வன வாசத்தை முடித்த பாண்டவர்கள், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை நடத்த திரௌபதியுடன் மத்சய நாட்டின் மன்னர் விராடனின் அரண்மனையில் மாறு வேடத்தில் பணியில் சேர்ந்தனர். நகுலன் மாறுவேடத்தில் கிரந்திகன் எனும் பெயரில் விராட நாட்டு குதிரைகளை பராமரித்தல் மற்றும் பயிற்சி அளிக்கும் பணியில் சேர்ந்தார்.[1]
திரௌபதி & மற்ற பாண்டவர்களின் மாறுவேடப் பெயர்கள்[தொகு]
விராட அரண்மனையில் தருமர் அந்தணர் வடிவத்தில் கங்கன் எனும் பெயரிலும், திரௌபதி விராட நாட்டின் பட்டத்து இராணி சுதோஷ்ணையின் கூந்தல் அலங்காரம் செய்ய சைரந்திரி எனும் பெயரிலும், அருச்சுனன் விராட இளவரசி உத்தரைக்கு நாட்டியம் கற்றுத் தர பிருகன்னளை எனும் பெயரிலும், வீமன் அரண்மனை சமையல்காராக வல்லபன் எனும் பெயரிலும், சகாதேவன் விராட நாட்டின் ஆநிரைகளை காக்கும் பணியில் தந்திரிபாலன் எனும் பெயரிலும் சேர்ந்தனர்..
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]