உள்ளடக்கத்துக்குச் செல்

சஞ்சயன் (மகாபாரதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சயன் (மகாபாரதம்)
சஞ்சயன்
குருச்சேத்திரப் போர் நிகழ்வுகளை ஞானக்கண்ணால் கண்டு மன்னர் திருதராட்டிரனுக்கு விளக்கும் சஞ்சயன்
Information
பால்ஆண்
தொழில்தேரோட்டி
மன்னரின் ஆலோசகர்
திருதராட்டிரன் சஞ்சயனை பாண்டவர்களிடம் தூது அனுப்புதல்

சஞ்சயன் (Sanjaya or Sanjay) (சமசுகிருதம்:सञ्जय) மகாபாரதம் காவியத்தில் மன்னர் திருதராட்டிரனின் தேரோட்டியும், ஆலோசகரும் ஆவார். இவர் சூதர் மரபினர் ஆவார்/[1] சஞ்சயனுக்கு வேதவியாசர் அருளிய தெய்வீகப் பார்வையைக் கொண்டு, பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் குருச்சேத்திரப் போர் நிகழ்வுகளை மன்னர் திருதராட்டிரனுக்கு உடனுக்குடன் உரைத்துக் கொண்டே இருப்பார்.[2] குருச்சேத்திரப் போர்க்களத்தில் தன் மகன்கள் இறந்த செய்திகளைக் கேட்டு மன்னர் திருதராஷ்டிரன் துயரம் அடைந்த போது, சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு ஆறுதல் கூறுவது வழக்கம்.

மன்னர் திருதராட்டிரன் கட்டளைப்படி குருச்சேத்திரப் போரை நிறுத்தக் கோரி சஞ்சயனை பாண்டவர்களிடம் தூது சென்றார்.[3][4]

போரில் வென்ற பாண்டவர்கள் முடிசூடிக் கொண்ட பின்னர், சில காலம் கழித்து திருதராட்டிரன், காந்தாரி, குந்தி, விதுரன் ஆகியோர் வனவாசம் செல்லும் போது, சஞ்சயனும் அவர்களுடன் வனத்திற்கு பயணித்தான்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. kingsaud 11 (2000). The Mahabharata: a shortened modern prose version of the Indian epic. University of Chicago Press.{{cite book}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. Celestial Vision obtained by Sanjaya!
  3. சஞ்சயன் தூதுச் சருக்கம்
  4. SECTION XXVII
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சயன்_(மகாபாரதம்)&oldid=3693402" இலிருந்து மீள்விக்கப்பட்டது