உள்ளடக்கத்துக்குச் செல்

சுகன்யா, மகாபாரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சுகன்யா (Sukanya) (சமக்கிருதம்: सुकन्या) , வேதகால முனிவரான சியவனரின் மனைவியும், மன்னர் சர்யாதியின் மகளும், வைவஸ்வத மனுவின் பேத்தியுமாவார்.[1]

மகாபாரதத்தில் சுகன்யா

[தொகு]

ரிஷி சியவனர் நீண்டகாலம் தவத்தில் இருந்ததால், தலை முதல் கால் வரை உடல் முழுவதும் பறவைகள் கூடு கட்டியது. இதை அறியாத சுகன்யா, சியவன முனிவர் மீது கட்டப்பட்டிருந்த கூடுகளை விளையாட்டாக கலைக்கும் போது, சுகன்யாவின் விரல்கள் சியவன முனிவரின் இரண்டு கண்களில் குத்தப்பட்டதால் சியவன முனிவர் இரண்டு கண்களின் பார்வை இழந்தார்.[2]

இதை அறிந்த மன்னர் சர்யாதி, சுகன்யாவை சிரவன முனிவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

ஒரு நாள் தேவலோக மருத்துவர்களும், இரட்டையர்களுமான அஸ்வினி தேவர்கள், சுகன்யாவின் அழகில் மயங்கி, வயதான மற்றும் கண் பார்வையற்ற சியவனரை விட்டு விட்டு, தங்களில் ஒருவரை மணந்து கொள்ள வேண்டினர். ஆனால் சுகன்யா அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார்.

சுகன்யாவின் பதிபக்திக்கு இரங்கிய அஸ்வினி தேவர்கள், ஒரு நிபந்தனையுடன் சியவன முனிவருக்கு அஸ்வினிகள் வழங்கிய தேவலோக மருந்துகளால், சியவனர் முதுமையை நீங்கி இளமையும், கண் பார்வையும் பெற்றார்.[3]

கணவரை அடையாளம் கானும் போட்டி

[தொகு]

அஸ்வினி குமாரர்கள் விதித்த நிபந்தனையின் படி, இரண்டு அஸ்வினி தேவர்கள் மற்றும் சியவனர் ஆகிய மூவரும் அருகில் உள்ள குளத்தில் குளித்து திரும்பி சுகன்யாவிடம் வருகையில், மூவரும் அஸ்வினி தேவர்கள் போன்று தோற்றமளித்தனர். இம்மூவரில் எவர் தனது கணவர் சியவனர் என்பதை அறிய இயலாது குழம்பினார் சுகன்யா. தனது கணவரை அடையாளம் காணவிட்டால், நிபந்தனையின் படி, தான் அஸ்வினிகளில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். எனவே குளக்கரைக்குச் சென்று பார்த்த சுகன்யா, இருவரின் கால் தடங்கள் மட்டும் தரையில் பதியாமல் இருப்பதையும், ஒருவரின் கால தடம் மட்டும் தரையில் பதிந்திருப்பதையும் கண்டாள்.

எனவே தரையில் கால் தடங்கள் பதித்தவரே தனது கணவர் சியவனரை என அடையாளம் கண்டாள் சுகன்யா. அஸ்வினிகளும் சுகன்யாவின் அறிவுக் கூர்மையைப் பாராட்டிச் சென்றனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pargiter, F.E. (1922, reprint 1972). Ancient Indian Historical Tradition, Delhi: Motilal Banarsid, Delhi: Motilal Banarsidass, p.197
  2. சுகன்யாவை மணந்த சியவனர்
  3. இளமையைப் பெற்ற சியவனர் - வனபர்வம் பகுதி 123
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகன்யா,_மகாபாரதம்&oldid=3802391" இலிருந்து மீள்விக்கப்பட்டது