சியவனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சியவன முனிவர்
Chyavana.jpg
சியவன முனிவர்
தகவல்
துணைவர்(கள்)ஆருஷி, சுகன்யா
பிள்ளைகள்ஔரவான், அப்னவவானன், தகிசன் & ஹரிதா

சியவனர் (Chyavana) (சமக்கிருதம்: च्यवन, Cyavana) இந்து தொன்மவியலில் ஆயுர்வேத மருத்துவத்தில் புலமைப் பெற்ற வேதகால ரிஷி ஆவார். சப்தரிஷிகளில் ஒருவரான மகரிஷி பிருகுவின் மகனான சியவனருக்கு, உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் மருந்தை வழங்கியமையால், அம்மருந்தை சியவனர் பெயரால் சியவனபிரஷ் (Chyawanprash) என இன்றும் அழைக்கப்படுகிறது.[1]

ரிக் வேத மந்திரங்கள், வயதானவராகவும், உடல் வலுவற்றவராக இருந்த சியவன முனிவருக்கு, தேவர்களின் மருத்துவர்களான அஸ்வினி தேவர்களின் வழங்கிய மருந்தால், சியவன முனிவர் மீண்டும் இளமையையும், உடல் வலுவையும் பெற்றதாக கூறுகிறது.[2]

குடும்பம்[தொகு]

சியவனர் வைவஸ்வதமனுவின்[3] மகளான ஆருஷியை மணந்து கொண்டு ஔராவான் எனும் மகனை பெற்றார். வேறு புராணங்களின் படி, வேதகால மன்னர் சர்யதியின் மகளும், வைவஸ்வத மனுவின் பேத்தியுமான சுகன்யாவை மணந்து அப்னவவானன் மற்றும் தகிசன் எனும் இரண்டு மகன்களையும், ஹரிதா எனும் மகளையும் பெற்றதாக உள்ளது.[4]

மகாபாரதம் கூறும் சியவனர்[தொகு]

மகாபாரதத்தின் ஆதி பருவம், அத்தியாயம் 5 & 6இன் படி, பிருகு முனிவரின் கர்ப்பிணி மனைவியான புலோமையை, ஒரு அரக்கன் வன்கொடுமை செய்ய முயலும் போது, புலோமையின் கருப்பையிலிருந்து நழுவி குழந்தை தரையில் விழுந்ததால், அக்குழந்தைக்கு சியவனன் எனப் பெயராயிற்று. வட மொழியில் சியவனன் அல்லது ச்யவனன் என்றால் நழுவி விழுந்தவன் என்று பொருள். ச்யவனம் என்றால் நழுவுதல் என்று பொருள்.[5][6]

சியவன முனிவரின் திருமணமும், இளமை திரும்புதலும்[தொகு]

அஸ்வினிகள் தோற்றத்தில் நின்றிருக்கும், தன் கணவர் சியவனரை அடையாளம் காட்டும் சுகன்யா

மகாபாரதத்தின் வன பருவம், அத்தியாயம் 122 மற்றும் 123ல் சியவன முனிவருக்கும், மன்னர் சர்யாதியின் மகள் சுகன்யாவிற்கும் நடந்த திருமணம், அஸ்வினி தேவர்களால் சியவனரின் முதுமை நீங்கி, இளமை திரும்பப் பெற்ற வரலாறும் கூறப்பட்டுள்ளது.[7][8]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியவனர்&oldid=3244356" இருந்து மீள்விக்கப்பட்டது