குரு, மன்னர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மன்னர் குரு, அத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னராவார். இவர் குருச்சேத்திரம் எனும் தர்மச் சேத்திரத்தில் பல்லாண்டுகள் கடும் தவம், தான, தருமங்கள் செய்த காரணத்தினால், இம்மன்னர் ஆண்ட, கங்கை ஆற்றிக்கும், யமுனை ஆற்றிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பை குரு நாடு என அழைக்கப்பட்டது.
மன்னர் குருவின் வழித்தோன்றல்களை குருக்கள் என்று அழைக்கப்பட்டனர். மகாபாரத காவியம் குறிப்பிடும், மன்னர் குருவின் மரபில் வந்த குறிப்பிடத்தக்கவர்கள்;
- சாந்தனு
- பீஷ்மர்
- சித்ராங்கதன்
- விசித்திரவீரியன்
- திருதராட்டிரன்
- பாண்டு
- விதுரன்
- பாண்டவர்
- கௌரவர்
- அபிமன்யு
- பரீட்சித்து
- ஜனமேஜயன்
மேற்கோள்கள்[தொகு]