உள்ளடக்கத்துக்குச் செல்

பீஷ்ம பருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்புப்படுக்கையில் பீஷ்மர்

"பீஷ்ம பருவம்" மகாபாரதத்தின் 18 பருவங்களில் 6வது ஆகும். இது குருச்சேத்திரப் போரில் பீஷ்மர் படைத்தலைவராகப் பங்குபெற்ற காலத்து நிகழ்வுகளைக் கூறும் பகுதியாகும். சஞ்சயன், போரின் முதற் பத்து நாட்கள் குறித்துத் திருதராஷ்டிரனுக்குச் சொல்வதாக இப்பகுதி அமைகிறது. வாசுதேவன் அர்ஜூனனின் மயக்கத்தைப் போக்கி போருக்குத் தயார் படுத்துதல் இந்தப் பகுதியிலேயே வரும். கிருஷ்ணன் அர்ஜூனனை இகழ்ந்து, பீஷ்மரைக் கொல்ல எத்தனித்தல், சிகண்டியை முன்னிறுத்தி அர்ஜூனன் பீஷ்மரை வீழ்த்துதல் போன்றவை இந்தப் பகுதியில் விபரிக்கப்படுகிறது. இந்தப் பர்வத்தின் முடிவில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுக்கிறார்.[1]

இந்த ஆறாவது பருவமான பீஷ்ம பருவத்தில் 117 பகுதிகளும், 15,884 சுலோகங்களும் உள்ளன.

மேற்கோள்

[தொகு]

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீஷ்ம_பருவம்&oldid=2640024" இலிருந்து மீள்விக்கப்பட்டது