பரசுராமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோடாரி ஆயுமுடைய பரசுராமர்

பரசுராமர் அல்லது பரசுராம பார்கவர் என்பவர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்கினி - ரேணுகா இணையரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். கடல் கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பதும் தொன்ம நம்பிக்கை.

சத்திரியர்கள் மீது கோபம் கொண்டு சத்திரிய குல மக்களை குறிப்பாக கார்த்தவீரிய அருச்சுனனை அழித்தவர். இவரது சீடர்களில் புகழ்பெற்றவர்கள் பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆவர்.

இவரது கதை இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.

கேரளம் பரசுராமரின் பூமி என கேரளத்தவர்களின் தொன்னம்பிக்கை.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரசுராமர்&oldid=1864318" இருந்து மீள்விக்கப்பட்டது