சுக்கிரீவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராமனும் இலட்சுமணனும் சுக்கிரீவனைச் சந்திக்கிறார்கள், மகாராட்டிரத்தில் உள்ள ஒரு ஓவியம்

சுக்கிரீவன் (சமசுக்கிருதம்: : सुग्रीव, Sugrīva) இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதை மாந்தர். வானரர்களின் அரசனும் வாலியின் சகோதரனும் ஆவான். சீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் வானரர்களின் அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்கிரீவனின் அமைச்சராக ஜாம்பவான், அனுமான் ஆகியோர் இருந்தனர். இராமன் சுக்கிரிவனுக்கு அவனது கொடிய அண்ணனான வாலியிடமிருந்து கிஷ்கிந்தையை மீட்டுக் கொடுத்து அவனை கிஷ்கிந்தையின் அரசனாக்கினான். பின்னர் சுக்கிரவன் சீதையைத் தேடுவதற்கு உதவி புரிந்தான். இராமன் சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்க்கு புரிந்த போரில் சுக்கிரீவன் தனது வானரப் படையுடன் உதவி புரிந்தான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்கிரீவன்&oldid=2119916" இருந்து மீள்விக்கப்பட்டது