நளன், இராமாயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நளன்
கடற்பாலம் கட்டுவது தொடர்பாக நளன் (வெள்ளை நிறம்) மற்றும் நீலன் (நீல நிற வானரம்), இராமரிடம் உரையாடுதல்
இராமர் பாலம் அல்லது நள சேது

நளன், இராமாயணம் குறிப்பிடும் வானர மன்னர் சுக்க்கிரீவனின் படைத்தலைவர்களில் ஒருவர் ஆவார். இலங்கை சென்று இராவணனுடன் போர் புரிந்து சீதையை மீட்க வேண்டி, நீலனின் துணையுடனும், நளன் வானரக் கூட்டத்தின் உதவியுடனும் நளன் கடலில் இராமேஸ்வரம் முதல் இலங்கை வரை கடற்பாலம் நிறுவினான். [1][2] [1]

நளனின் தலைமையில் கடற்பாலம் கட்டப்பட்டதால், இந்த கடற்பாலத்திற்கு நள சேது என்பர்.[3]

இராம-இராவணப் போரில் நளன் பல அரக்கர்களைக் கொன்று குவித்தார். போரில் ஒரு முறை இந்திரஜித்தின் கூரிய அம்பால், நளன் பலத்த காயமடைந்து மயங்கி வீழ்ந்தான்.[4] அரக்கர் படைத்தலைவரான தபனனை, நளன் கொன்றார். [5]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நளன்,_இராமாயணம்&oldid=3786564" இலிருந்து மீள்விக்கப்பட்டது