உள்ளடக்கத்துக்குச் செல்

மாரீசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமர் எய்திய அம்பால் மாரீசன் இறத்தல்
தங்க மான் உருவில் வந்த மாரீசனை, இராமர் அம்பெய்தி கொல்லும் சிற்பம், பிரம்பானான் கோயில், இந்தோனேசியா

மாரீசன் (வடமொழி: मारीच, mārīcha), இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம் ஆகும்.

பொன் மானாக வந்த அரக்கன் இராவணனின் மாமன் ஆவான். இராவணன் சீதையை தூக்கிக் கொண்டு போக எண்ணினான். அதற்கு அவன் தனது மாமனின் உதவியை நாடினான். அவன் மாமனும் அதற்கு சம்மதித்தான்.

அழகிய பொன் மான் உருவம் எடுத்து சீதை முன் சென்றான். அதன் அழகைக் கண்டு மயங்கிய சீதை, மானைப் பிடித்துத் தரும்படி இராமனிடம் கேட்டாள். சீதையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இராமன் மானைத் துரத்திக்கொண்டு போனார். சீதைக்கு இலக்குமணன் காவலாக இருந்தான். இராமனின் பாணம் மானைக் கொன்றது.[1] திடீரென்று "இலக்குமணா!" என்னும் சத்தம் கேட்டது.

இது அந்த அரக்கனின் மாயம் ஆகும். சீதைக்கு அச்சம் பிறந்தது, இராமனை அழைக்க இலக்குமணனை அனுப்பினாள். அந்தச் சமயம் பார்த்து சீதையை இராவணன் தூக்கிக்கொண்டு போனான்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 8. மாரீசன் வதைப் படலம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரீசன்&oldid=4132506" இலிருந்து மீள்விக்கப்பட்டது