சத்துருக்கன்
இராமாயணக்கதையின் படி சத்துருக்கன் அல்லது சத்துருக்கனன் இராமரின் தம்பி. இவரும் இலக்குவனும் இரட்டையர்கள். இவரும் இலக்குவனும் தசரதருக்கும் சுமித்திரைக்கும் பிறந்தவர்களாவர். இலக்குவன் இராமனுக்கு நெருக்கமாக இருந்ததைப் போலவே சத்துருக்கன் பரதனுடன் நெருக்கமாக இருந்தான். சுருதகீர்த்தி இவனது மனைவி ஆவார்.
கோயில்[தொகு]
சத்துருக்கனனுக்கு கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் பாயம்மல் என்னுமிடத்தில் சத்துருக்கன் கோயில் ஒன்று உள்ளது.