இந்திரசித்து
இந்திரஜித் அல்லது மேகநாதன் இந்து புராணங்களின்படி இலங்கை நாடு மற்றும் இந்திர லோகத்திற்கு (சொர்க்கம்) இளவரசனாவான். இந்து புராணமானா இராமாயணத்தின்படி இவன் இராவணனின் மகனாவான். இவனது தாயார் மண்டோதரி இந்து புராணங்களில் மிகப் பெரிய போர்வீரர்களில் ஒருவனாக அவர் கருதப்படுகிறான். இவன் மந்திர வலிமைப்படைத்தவன். இவனைப் பற்றி இந்திய காவியமான இராமாயணம் குறிப்பிடுகிறது. மேலும் இராமனுக்கும் இராவணனுக்கும் இடையே நடைப்பெற்ற பெரும் போரில் இந்திரஜித் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தான். இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் மற்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ளபடி பூமியில் இதுவரை பிறந்த சிறந்த போர்வீரன் என்று அவர் கருதப்படுகிறார்.
மூன்று மூர்த்திகளின் பிரம்மாஸ்திரம், வைணவஸ்திரம், மற்றும் பாசுபத அஸ்திரம் ஆகிய மூன்று ஆயுதங்களை வைத்திருந்த ஒரே ஒரு போர்வீரன் அவர் எனவும் போற்றப்படுகிறான். அவர் தனது குரு சுக்ராச்சாரியார் மற்றும் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் போன்றவர்களிடமிருந்து அனைத்து வகையான ஆயுதங்களையும் பெற்றவர் ஆவான். மேலுலகத்தில் இந்திர லோகத்தில் உள்ள தேவர்களையும், அசுரர்களையும் மற்றும் மும்மூர்த்திகளையும் போரில் தோற்கடித்ததன் மூலம் அவர்களது அனைத்து வகையான ஆயுதங்களையும் தன் வசம் வைத்திருந்தான்.[1]
சீதையை மீட்கும் போரில், இராமர் மற்றும் இலட்சுமணன்ஆகிய இருவரையும் இந்திரஜித் அடக்கினான். பின்னர் இந்திரஜித், இலக்குமணனால் அவர்களின் இரண்டாவது சந்திப்பில் வீழ்த்தப்படுகிறான்.[2] இந்திரஜித் 670 லட்சம் வானரங்களை ஒரே நாளில் கொன்றான். இந்தப் போரில் கிட்டத்தட்ட பாதி குரங்கு இனம் அழிந்தது.[1][3]
பெயர்க்காரணம்
[தொகு]இந்திரஜித் பிறந்து முதன் முதலில் அழுதபோது இடியும் மின்னலும் ஒரு பெரும் வீரனின் பிறப்பைக் குறித்து உருவாகியமையால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான். தேவர்களின் அரசனான இந்திரனை வென்று சிறைப்படுத்தியமையால் இந்திரனை வென்றவன் என்று பொருள்படும் இந்திரஜித் என்ற பட்டப்பெயர் இவனுக்கு பிரம்மாவால் வழங்கப்பட்டது.[4] அவன் சக்ராஜித், ராவணி, வாசவஜித், வரிதனதா மற்றும் கானாந்தா என்றும் அழைக்கப் பட்டான். சுலோச்சனா இந்திரஜித்தின் மனைவியாவர்.
சுயசரிதை
[தொகு]இந்திரஜித் பிறந்து முதன் முதலில் அழுதபோது இடியும் மின்னலும் ஒரு பெரும் வீரனின் பிறப்பைக் குறித்து உருவாகியமையால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான். மேகநாதன் பிறக்கும் போது, உலகில் யாரும் அவனைத் தோற்கடிக்கக்கூடாது எனவும் தனது மகன் உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று ராவணன் விரும்பினான். ராவணன் தனது மகன் சிறந்த போர்வீரனாகவும், மிகவும் அறிவானவனாகவும் இருக்க விரும்பினான். ராவணன் ஒரு சிறந்த ஜோதிட சாத்திரம் தெரிந்தவனாக இருந்தான். எனவே தனது மகனை அழியாதவனாக்க அவன் அனைத்து கிரகங்களுக்கும் விண்மீன்களுக்கும் கட்டளையிட்டான். அத்தகைய நிலையில் தனது மகன் பிறக்க அனுமதிக்க வேண்டும் என்று ராவணன் விரும்பினான்.
இராவணனின் கோபம் மற்றும் சக்தி காரணமாக, அனைத்து கிரகங்களும் விண்மீன்களும் அவருக்கு அஞ்சின. அவரது மகன் மேகநாதன் பிறந்த நேரத்தில் ராவணன் விரும்பிய நிலையில் அனைத்து கிரகங்களும் இருந்தன. அனைத்து கிரகங்களும் அவரது மேகநாதனின் ஜாதகத்தின் 11 வது வீட்டில் இருக்குமாறு சீரமைக்கப்பட்டன.[5] இருப்பினும், சனி கிரகம் இராவணனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் மேகநாதனின் ஜாதகத்தின் 12 வது வீட்டில் குடியேறினார். இதைக் கண்டு கோபமடைந்த ராவணன் சனியைப் ஊனமடையச் செய்தான். சனியின் நிலை காரணமாக, ராமருக்கும் இராவணனுக்கும் இடையிலான போரில் மேகநாதன் லட்சுமணனின் கைகளில் இறக்க நேரிட்டது.
மிக இளம் வயதிலேயே, மேகநாதன் பிரம்மாஸ்திரம், வைணவஸ்திரம், மற்றும் பாசுபத அஸ்திரம் ஆகிய மூன்று ஆயுதங்கள் உள்ளிட்ட பல உயர்ந்த வான ஆயுதங்களை வைத்திருந்தான். மேகநாதன் மந்திர போர், சூனியம் மற்றும் தந்திரம் ஆகியவற்றில் நிபுணராக இருந்தான். சுலோச்சனா பாம்புகளின் அரசனான சேச நாகனின் மகள் ஆவார். இவளை இராவணின் மகனான இந்திரசித்து மணந்து கொண்டான்.[4] கதைகளில் சுலோச்சனா வீரம் மிகுந்தவளாகக் காட்டப்படுகிறாள். இந்திரசித்து இராமனுடன் போரிடச் செல்கையில் அழாமலும் அவனைத் தடுக்காமலும் சுலோச்சனா வீரத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் பார்க்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 C. G. Uragoda (2000). Traditions of Sri Lanka: A Selection with a Scientific Background. Vishva Lekha Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-96843-0-5.
- ↑ 27. இந்திரசித்து வதைப் படலம்
- ↑ George M. Eberhart (1 January 2002). Mysterious Creatures: A Guide to Cryptozoology. ABC-CLIO. p. 388. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-283-7.
- ↑ 4.0 4.1 http://www.sacred-texts.com/hin/rama/
- ↑ "Ravana and Shani fight over the horoscope of Meghnad". http://daily.bhaskar.com/news/JM-a-furious-fight-between-raavan-and-lord-shani-killed-raavans-son-meghnad-4636058-PHO.html?seq=2. பார்த்த நாள்: December 2, 2015.