உள்ளடக்கத்துக்குச் செல்

மிதிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிதிலை நகரை தலைநகராகக் கொண்ட விதேக நாட்டின் வரைபடம்

சனகன் என்னும் அரசன் ஆட்சி செய்ததாக இராமாயணம் எனும் நூல் கூறும் விதேக நாட்டின் தலைநகரம் மிதிலையாகும். இங்கு குழந்தையாயிருந்த சீதையைப் பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து மன்னன் சனகன் அவளை வளர்த்ததாக இராமாயணம் கூறுகிறது. சீதையின் சுயம்வரம் இங்கு நடந்தது.

சனகன் அரசன் ஏர் உழுது கொண்டிருக்கும் பொழுது அவருடைய நிலத்தில் ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்தார் அக்குழந்தைக்கு சீதை என்று பெயரிட்டார். மிதிலை நாட்டில் சிவன் வரமாக கொடுத்த வில் ஒன்று இருந்தது, அவ்வில்லை யார் எடுத்து நாண் ஏற்றுகிறார்களோ அவர்களுக்கே சீதையுடன் சுயம்வரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் எந்த இளவரசனாலும் அப்போட்டியில் வெல்ல முடியவில்லை, இறுதியாக இராமன் அப்போட்டியில் வென்று சீதையை திருமணம் செய்துகொண்டார். மன்னர் சனகனின் இளைய சகோதரனின் மூன்று புதல்விகளை முறையே, இலக்குவன், பரதன் மற்றும் சத்ருக்கனன் மணந்து கொண்டனர்.

மேற்கோள்கள்

[தொகு]

இரஜாஜி எழுதிய இராமாயணம். வால்மிகி எழுதிய இராமாயணம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதிலை&oldid=4059205" இலிருந்து மீள்விக்கப்பட்டது