தசரதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தசரதன் அனுமதியின் பேரில் இராம-இலக்குவனர்களை வேள்வியின் பொருட்டு காணகத்திற்கு அழைத்துச் செல்லும் விசுவாமித்திரர்[1]
இராமனை காட்டுக்கு அனுப்பி, பரதனை அயோத்தி நாட்டுக்கு பட்டம் சூட்ட, தசரதனிடம் புலம்பும் கைகேயி

தசரதன் இராமாயணத்தில் வரும் அயோத்தியின் மன்னன் ஆவார். இவர் இரகுவம்சத்தைச் சேர்ந்தவர். இவர் இராமரின் தந்தை ஆவார். இவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். கௌசல்யா, சுமித்ரா, கைகேயி ஆகியோர் இவருடைய மனைவிகள் ஆவர். இராமன் கௌசல்யாவுக்கும், இலட்சுமணனும் சத்ருக்கனனும் சுமித்திரைக்கும், பரதன் கைகேயிக்கும் பிறந்தவர்கள். [2]

தனது மனைவிகளில் ஒருத்தியாகிய கைகேயிக்கு கொடுத்த வரத்தின் காரணமாக, ராமரைக் காட்டுக்கு அனுப்பும் நிலை நேரிட்டது. இராமரின் பிரிவால் தசரதன் மரணமடைந்தார். இராவணன் கொல்லப்பட்ட பிறகு வானத்தில் தோன்றி, இராம -இலக்குமணர்களையும், சீதையையும் வாழ்த்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. [6. கையடைப் படலம்
  2. 5. திரு அவதாரப் படலம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசரதன்&oldid=2284558" இருந்து மீள்விக்கப்பட்டது